×

கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய சென்னை போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

காவல் அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்த கார் ஒட்டுனர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் என்.டி.எல் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25ம் தேதி காலை 8 மணியளவில் டி.எல்.ஃப் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். மற்றொருவரை பிக்-அப் செய்தவற்காக பாடி சிக்னலில் இருந்து அண்னாநகர் செல்லும் வழியில் காரை நிறுத்தியுள்ளார். அப்போது, அங்கு வந்த 2
 
கார் ஓட்டுனரை தற்கொலைக்கு தூண்டிய சென்னை போலீஸ் – அதிர்ச்சி வீடியோ

காவல் அதிகாரிகள் திட்டியதால் மனமுடைந்த கார் ஒட்டுனர் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் என்.டி.எல் நிறுவனத்தில் கால் டாக்சி ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25ம் தேதி காலை 8 மணியளவில் டி.எல்.ஃப் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணை அழைத்துக்கொண்டு சென்றுள்ளார். மற்றொருவரை பிக்-அப் செய்தவற்காக பாடி சிக்னலில் இருந்து அண்னாநகர் செல்லும் வழியில் காரை நிறுத்தியுள்ளார்.

அப்போது, அங்கு வந்த 2 போலீசார் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி காரை அங்கிருந்து எடுத்து செல்லுமாறு கூறியுள்ளனர். எனவே அங்கிருந்து 100 அடி தள்ளி ஒரு மரத்தின் கீழ் காரை ராஜேஷ் நிறுத்தியுள்ளார். ஆனால், அங்கும் வந்த போலீசார் காருக்குள் ஒரு பெண் இருப்பதையும் பொருட்படுத்தாமல் கெட்ட, கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

இதனால் மனமுடைந்த ராஜேஷ் தற்கொலை செய்வது என முடிவெடுத்தார். அதற்கு முன்பு செல்போனில் நடந்தவற்றை விவரித்து, என் கொலைக்கு சென்னை போலீசே காரணம் எனக்கூறிவிட்டு, ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட போலீசார், அங்கிருந்த செல்போனை எடுத்து சோதனை செய்துள்ளனர். அதில் இருந்த வீடியோவை பார்த்துள்ளனர். விஷயம் வெளியே தெரியக்கூடாது என அந்த வீடியோவை அழித்துவிட்டு, ராஜேஷின் குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டனர். மேலும், குடும்ப பிரச்சனைக்காக அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் குறிப்பிட்டு கோப்பை மூடி விட்டனர்.

ஆனால், வீடியோக்கள் அழிக்கப்பட்டதை கண்டுபிடித்த குடும்பத்தினர், டெலிட் செய்யப்பட்ட வீடியோக்களை திரும்ப பெறும் ஆப் மூலம் மீட்டு பார்த்த போதுதான் இந்த விவகாரம் ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. ராஜேஷ் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது. சம்பந்தப்பட அந்த 2 போலீசாரின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் ஆக்ரோஷமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு தரமணியில் போலீஸ் ஒருவர் அநாகரீகமாக பேசியதால் கால் டாக்சி ஓட்டுனர் மணிகண்டன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

Video Courtesy to – IBC Tamil

From around the web

Trending Videos

Tamilnadu News