×

பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

திருச்செங்கோடு அருகே பஸ் கிடைக்காததால் தனக்கு தெரிந்தவரோடு நம்பி பயணம் செய்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்செங்கோடு இறையாமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா. இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் திருச்செங்கோட்டில் உள்ள மேக் அப் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார். நேற்று முன் தினம் இவர் வழக்கமாக செல்லும் பேருந்தை தவறிவிட்டதால் தெரிந்தவர் ஒருவருடன் காரில் வருவதாக தனது கணவர் செந்திலுக்கு தகவல்
 
பஸ்ஸை விட்டதால் தெரிந்தவருடன் கார்பயணம் – சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் துயரக்கதை !

திருச்செங்கோடு அருகே பஸ் கிடைக்காததால் தனக்கு தெரிந்தவரோடு நம்பி பயணம் செய்த பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு இறையாமங்களம் பகுதியைச் சேர்ந்தவர் சோபனா. இவருக்குத் திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் திருச்செங்கோட்டில் உள்ள மேக் அப் நிலையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பியூட்டிஷியனாக வேலை செய்து வருகிறார்.

நேற்று முன் தினம் இவர் வழக்கமாக செல்லும் பேருந்தை தவறிவிட்டதால் தெரிந்தவர் ஒருவருடன் காரில் வருவதாக தனது கணவர் செந்திலுக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் நீண்டநேரம் ஆகியும் அவர் வீட்டிற்கு வராததால் பயந்து போன கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலிஸாரின் தேடுதலில் புள்ளிப்பாளையம் எனும் பகுதிக்கு அருகே ஷோபனாவின் உடலைக் கண்டெடுத்துள்ளனர்.

இச்சமபவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொலையாளி யார் என்பது குறித்துப் போலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News