×

சாதி பிரச்சனை.. சடலத்தை கயிறு கட்டி கீழே இறக்கிய அவலம் – வேலூரில் அதிர்ச்சி

வேலூர் அருகே சாதியை காரணம் காட்டி ஒரு சடலத்தை பாலம் வழியே எடுத்து செல்ல சிலர் அனுமதி மறுத்ததால் கயிறு கட்டி கீழே இறக்கி சடலத்தை கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள கிராமம் அலசந்தாபுரம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருக்கின்றன. அந்த கிராமத்தில் இறந்து போனவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்லும் போது
 
சாதி பிரச்சனை.. சடலத்தை கயிறு கட்டி கீழே இறக்கிய அவலம் – வேலூரில் அதிர்ச்சி

வேலூர் அருகே சாதியை காரணம் காட்டி ஒரு சடலத்தை பாலம் வழியே எடுத்து செல்ல சிலர் அனுமதி மறுத்ததால் கயிறு கட்டி கீழே இறக்கி சடலத்தை கொண்டு சென்ற அவலம் நடந்துள்ளது.

வேலூர் மாவட்டம் நாற்றம்பள்ளி அருகே உள்ள கிராமம் அலசந்தாபுரம். இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த ஊரில் இருந்து சுடுகாட்டிற்கு செல்லும் வழியில் தனியார் நிலங்கள் இருக்கின்றன. அந்த கிராமத்தில் இறந்து போனவர்களின் உடலை அந்த வழியாக எடுத்து செல்லும் போது சாதியை காரணம் காட்டி அந்த வழியாக கொண்டு செல்ல சிலர் அனுமதி மறுப்பதாக தெரிகிறது.

சாதி பிரச்சனை.. சடலத்தை கயிறு கட்டி கீழே இறக்கிய அவலம் – வேலூரில் அதிர்ச்சி

இந்நிலையில், அந்த கிராமத்தில் இன்று காலை குப்பன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார். எனவே, அவரை அடக்கம் செய்ய அக்கிராமத்தினர் சுடுகாட்டிற்கு அவரின் உடலை எடுத்து சென்றனர். ஆனால், அவரின் உடலை எடுத்த செல்ல சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். எவ்வளவு கெஞ்சியும் அவர்கள் அனுமதிக்கவில்லை.

எனவே, குப்பனின் உடலை கயிற்றில் கட்டி பாலத்தில் வழியாக கீழே இறங்கி அதன்பின் குறுக்கு வழியில் சுடுகாட்டில் எரியூட்டியுள்ளனர். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நாகரீகம் இவ்வளவு வளர்ந்த பின்னும் சாதியை காரணம் காட்டி சிலர் இப்படி கட்டுமிராண்டித்தனமாக நடந்து கொள்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News