×

சென்னை பண்டிகை கால சிறப்புப் பேருந்து நிலையங்கள் – விவரம் உள்ளே !

தீபாவளி மற்றும் ஆயுதபூஜைக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘சென்னையில் இருந்து 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். ஆயுத பூஜைக்காக 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 6145 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு
 
சென்னை பண்டிகை கால சிறப்புப் பேருந்து நிலையங்கள் – விவரம் உள்ளே !

தீபாவளி மற்றும் ஆயுதபூஜைக்காக சென்னை போன்ற பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ‘சென்னையில் இருந்து 5 இடங்களில் சிறப்புப் பேருந்து நிலையங்கள் அமைக்கப்படும். ஆயுத பூஜைக்காக  4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 6145 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு வரும் 24ஆம் தேதி முதல் 26ஆம்  தேதி வரை 10,940 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்தும் 8,310 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன முன்பதிவு செய்ய சென்னை முழுவதும் 20 முன் பதிவு மையங்கள் திறக்கப்பட உள்ளன. ’ என அறிவித்தார்.

சென்னை சிறப்பு பேருந்து நிலையங்கள் விவரம் :-

  • மாதவரம் புதிய பேருந்து நிலையம் – ஆந்திரா மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
  • கே.கே.நகர் – ECR வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்
  • மெப்ஸ் பேருந்து நிலையம் – திண்டிவனம் , கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள்
  • தாம்பரம் ரயில் நிலைய அருகில் – திண்டிவனம், வந்தவாசி, செஞ்சி செல்லும் பேருந்துகள்
  • பூந்தமல்லி பேருந்து நிலையம் – ஆற்காடு, வேலூர், காஞ்சிபுரம் ஆகியப் பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள்

From around the web

Trending Videos

Tamilnadu News