×

சினிமா..அரசியல்.. ஜே.கே.ரித்தீஷ் கடந்து வந்து பாதை..

Actor J.K.Ritheesh – நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார். இந்நிலையில், சினிமா, அரசியல் என இரண்டிலும் அவர் கடந்து வந்த பாதைகள் பற்றி இங்கு காண்போம். 2007ம் ஆண்டு நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கிய ‘கானல் நீர்’ படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின்புதான் ஜே.கே.ரித்தீஷை பலருக்கும் தெரியவந்தது. பணத்தை வாரி இறைத்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி ஆட்கள் படை சூழ எப்போதும் மாஸாக வலம் வருவார். நிறைய உதவிகளும்
 
சினிமா..அரசியல்.. ஜே.கே.ரித்தீஷ் கடந்து வந்து பாதை..

Actor J.K.Ritheesh – நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்தீஷ் இன்று மாரடைப்பால் காலமானார்.

இந்நிலையில், சினிமா, அரசியல் என இரண்டிலும் அவர் கடந்து வந்த பாதைகள் பற்றி இங்கு காண்போம்.

2007ம் ஆண்டு நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த் இயக்கிய ‘கானல் நீர்’ படத்தில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த பின்புதான் ஜே.கே.ரித்தீஷை பலருக்கும் தெரியவந்தது. பணத்தை வாரி இறைத்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி ஆட்கள் படை சூழ எப்போதும் மாஸாக வலம் வருவார். நிறைய உதவிகளும் செய்து வந்தார். அதன்பின் அவர் நடித்த ‘நாயகன்’ படம் வெற்றி பெற்றது. ஆனாலும், அதன்பின் அவர் சினிமாவில் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

சினிமா..அரசியல்.. ஜே.கே.ரித்தீஷ் கடந்து வந்து பாதை..

மாறாக அரசியலில் ஆர்வம் காட்டினார். திமுக, அதிமுக இரண்டு கட்சிகளிலும் இருந்துள்ளார். 2009ம் ஆண்டு அவரது சொந்த ஊரான ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி.ஆனார். திமுகவில் இருந்து அழகிரி நீக்கப்பட்டவுடன் அவரின் ஆதரவாளராக செயல்பட்டார். 2014ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார்.

ஜெ.வின் வளர்ப்பு மகன் சுதாகரனின் பினாமியாக செயல்படுவதால்தான் இவரின் நிறைய பணம் இருக்கிறது என சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டு வந்தது.

சினிமா..அரசியல்.. ஜே.கே.ரித்தீஷ் கடந்து வந்து பாதை..

ஆர்.ஜே. பாலாஜி நடித்து சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். மேலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராமநாதபுரம் தொகுதியில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.

இன்று காலை முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர் இன்று மாலை மதிய உணவுக்கு பின் அவரின் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. எனவே, அவரின் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

சினிமா..அரசியல்.. ஜே.கே.ரித்தீஷ் கடந்து வந்து பாதை..

ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரின் உறவினர்கள் அவரது உடலை வீட்டிற்கு எடுத்து சென்றனர். ஆனால், திடீரென அவருக்கு இதய துடிப்பு இருந்ததாக நினைத்து மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

ஜே.கே.ரித்தீஷுக்கு வயது 46. அவருக்கு ஜோதீஸ்வரி என்கிற மனைவியும், ஆரிக் ரோஷன் என்கிற மகனும் உள்ளனர். அவரின் திடீர் மறைவு அரசியலில் அவரின் ஆதரவாளர்களுக்கும், சினிமா துறையினருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News