×

பொள்ளாச்சி சம்பவத்தில் சர்ச்சை கருத்து – பாக்யராஜுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் !

பொள்ளாச்சி பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதும் தவறு உள்ளது எனப் பேசிய இயக்குனர் பாக்யராஜுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பங்குள்ளது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது எனப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து பாக்யராஜுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விஷயத்தில் முதன் முதலாக
 
பொள்ளாச்சி சம்பவத்தில் சர்ச்சை கருத்து – பாக்யராஜுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் !

பொள்ளாச்சி பாலியல் அத்துமீறல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதும் தவறு உள்ளது எனப் பேசிய இயக்குனர் பாக்யராஜுக்கு ஆண்கள் பாதுகாப்பு சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

கருத்துகளை பதிவு செய் என்ற படத்தின் ஆடியோ ரிலிஸ் விழாவில் பேசிய இயக்குனர் பாக்யராஜ் பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும் பங்குள்ளது. ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது எனப் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து பாக்யராஜுக்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தன. இந்த விஷயத்தில் முதன் முதலாக பாக்யராஜுக்கு ஆதரவாக ஆண்கள் பாதுகாப்பு சங்கம் என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்

’பெண்கள் எச்சரிக்கையாக இருந்தால் தவறுகள் நடக்காது என்று மனதில் பட்டதை பேசுவதோடு நில்லாமல் சமுதாய நலன் சார்ந்து பெண்களை சுயகட்டுப்பாடுடன் இருக்க வேண்டும் என்று அறிவுரை கூறியது. மிகவும் பாராட்டத்தக்கது. மட்டுமல்லாமல் துணிச்சலான கருத்தும் ஆகும். தொடர்ந்து நீங்கள் இந்திய கலாசாரத்தை சிதைக்கின்ற வகையிலும் பால்மனம் மாறா குழந்தைகளின் கொடூர கொலைகளுக்கு காரணமாக இருக்கும் பெண்களை பற்றிய உங்கள் கருத்துகளை பதிவிட்டு சமுதாய சீர்திருத்தத்தினை ஏற்படுத்த வேண்டும்.

பெண்களைப் பற்றி பேசினாலே ஏதாவது வடிவில் பிரச்னைகளை சந்திக்க நேரிடும் என பலரும் ஓடி ஒதுங்கிக் கொள்ளும் இந்தச் சூழலில் தங்களின் துணிச்சலான சமுதாய நலன் சார்ந்த கருத்துகளை ஆண்கள் பாதுகாப்பு சங்கம் பாராட்டுகிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News