×

நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி – ‘சிக்ஸர்’ நாளை வெளிவருமா?

Goundamani sent notice to sixer movie team – நாளை வெளியாகவிருந்த சிக்ஸர் படத்திற்கு எதிராக நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ‘சிக்ஸர்’. இப்படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். இதை
 
நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி –  ‘சிக்ஸர்’ நாளை வெளிவருமா?

Goundamani sent notice to sixer movie team – நாளை வெளியாகவிருந்த சிக்ஸர் படத்திற்கு எதிராக நடிகர் கவுண்டமணி தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வைபவ் நடித்துள்ள திரைப்படம் ‘சிக்ஸர்’. இப்படத்தில் 6 மணிக்கு மேல் கண் தெரியாத மாலைக்கண் உள்ள கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு பிரபு நடிப்பில் வெளியான சின்னதம்பி திரைப்படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி இந்த கதாபாத்திரத்தில்தான் நடித்திருந்தார். இதை இன்ஸ்பிரேசனாக வைத்தே சிக்ஸர் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நோட்டீஸ் அனுப்பிய கவுண்டமணி –  ‘சிக்ஸர்’ நாளை வெளிவருமா?

சிக்ஸர் படத்தின் ட்ரெய்லரிலும் ‘ஒரு கோடி ரூபா கொடுத்தா கூட ஆறு மணிக்கு மேல வேல செய்ய மாட்டெண்டா, டேய் முப்பது ரூபா கொடுத்தா மூணு ஆளைக்கு கண்ணு முழிச்சி வேல பார்ப்பேண்டா, தாத்தா டேய்! சிறப்பா பண்ணிட்டா டா, ராத்திரில்லாம் என்னென்ன அக்கிரமம் பண்ணியோ’ என வைபவ் பேசும் வசனங்கள் வருகிறது. மேலும், கவுண்டமணியின் பேரன் போல் வைபவின் கதாபாத்திரம் வருகிறது. அவரின் புகைப்படமும் அவரின் அறையில் மாட்டப்பட்டுள்ளது.

இது தனது கதாபாத்திரத்தை இழிவு செய்வது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது என கவுண்டமணி தரப்பில் சிக்ஸர் பட தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதேபோல், கவுண்டமணியின் புகைப்படம் காட்டப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்காவிட்டால் சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

நாளை சிக்சர் திரைப்படம் வெளியாகவுள்ள நிலையில், அந்த காட்சிகள் நீக்கப்படுமா என்பது தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News