×

வீட்டில் அடைக்கலம் கொடுத்தவருக்கு நடந்த சோகம் – இரட்டைக் கொலை செய்த தம்பதிகள் கைது !

சென்னையில் தனது வீட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலம் கொடுத்தவர்களை பணத்துக்காக கொலை செய்துவிட்டு தலைமறைவான சுரேஷ்குமார் – பூவலட்சுமி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை ஆவடியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ஜெகதீசன் அடிக்கடி செல்லும் மது விடுதியில் சந்தித்த நபரான சுரேஷ்குமார் என்பவரை வீட்டுக்கு அழைத்துவந்து வேலைக் கொடுத்துள்ளார். அதோடு அவரது மனைவி பூவலட்சுமியையும் தன்னுடைய பண்ணை வீட்டிலேயே தங்க அனுமதிக் கொடுத்துள்ளார். சுரேஷ்குமார் வீட்டுக்கு வந்ததற்குப் பிறகு ஜெகதீசனின் குடிப்பழக்கம் அதிகமானதை அடுத்து
 
வீட்டில் அடைக்கலம் கொடுத்தவருக்கு நடந்த சோகம் – இரட்டைக் கொலை செய்த தம்பதிகள் கைது !

சென்னையில் தனது வீட்டில் தங்கிக் கொள்ள அடைக்கலம் கொடுத்தவர்களை பணத்துக்காக கொலை செய்துவிட்டு தலைமறைவான சுரேஷ்குமார் – பூவலட்சுமி தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை ஆவடியில் வசித்து வந்த ஓய்வுபெற்ற அரசு அதிகாரியான ஜெகதீசன் அடிக்கடி செல்லும் மது விடுதியில் சந்தித்த நபரான சுரேஷ்குமார் என்பவரை வீட்டுக்கு அழைத்துவந்து வேலைக் கொடுத்துள்ளார். அதோடு அவரது மனைவி பூவலட்சுமியையும் தன்னுடைய பண்ணை வீட்டிலேயே தங்க அனுமதிக் கொடுத்துள்ளார்.

சுரேஷ்குமார் வீட்டுக்கு வந்ததற்குப் பிறகு ஜெகதீசனின் குடிப்பழக்கம் அதிகமானதை அடுத்து அவரின் மனைவி விலாசினி சுரேஷை வேலையை விட்டு நீக்க சொல்லியுள்ளார். அதற்கு ஜெகதீசனும் சம்மதிக்க தனது சொகுசு வாழ்க்கை பறிபோய்விடுமோ என அஞ்சிய சுரேஷ் ஜெகதீசனை நன்றாகக் குடிக்க வைத்துவிட்டு இரும்புக் கம்பியால் அவரையும் அவரது மனைவியும் தாக்கிக் கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டில் இருந்த நகை மற்றும் பணம் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தன் மனைவியோடு தலைமறைவாகியுள்ளனர்.

கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகிவிட்ட இந்த கொலைவழக்கில் இப்போது சுரேஷ்குமாரும் அவர்து மனைவியும் ஹரித்வாரில் வைத்து போலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அங்கு சுரேஷ்குமார் ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருந்ததாக போலிஸார் தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News