×

அப்பா ரூமில்… அம்மா சமையலறையில் – குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் !

திருவள்ளூர் மாவட்டத்தில் குளியலறையில் இருந்த வாளி தண்ணிர் கீழே கொட்டி குழந்தை மூச்சுத் திணறி இறந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கால் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தனது மகனை ஆசையாகக் குளிப்பாட்டுவதற்காக நேற்று குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வரவே அதை எடுக்க தனது ரூமிற்குள் சென்றுள்ளார். அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் கவிழ்ந்து குழந்தை
 
அப்பா ரூமில்… அம்மா சமையலறையில் – குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் !

திருவள்ளூர் மாவட்டத்தில் குளியலறையில் இருந்த வாளி தண்ணிர் கீழே கொட்டி குழந்தை மூச்சுத் திணறி இறந்த சோகமான சம்பவம் நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள செங்கால் எனும் பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கு ஒன்றரை வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. தனது மகனை ஆசையாகக் குளிப்பாட்டுவதற்காக நேற்று குளியலறைக்குச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு செல்போன் அழைப்பு வரவே அதை எடுக்க தனது ரூமிற்குள் சென்றுள்ளார்.

அந்நேரத்தில் எதிர்பாராத விதமாக வாளியில் இருந்த தண்ணீர் கவிழ்ந்து குழந்தை மேல் கொட்டியுள்ளது. இதனால் குழந்தைக்குக் கடுமையாக மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. குழந்தையின் தாயும் சமையலறையில் வேலையாக இருந்ததால் குழந்தைத் தவிப்பதை யாரும் அறியவில்லை. முருகன் செல்போன் பேசிவிட்டு வந்து பார்க்கும் போது குழந்தை மிகவும் மோசமான நிலையில் இருந்துள்ளது.

உடனடியாக குழந்தையை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் குழந்தை சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளது. இந்த சம்பவத்தால் வெங்கால் பகுதியே மிகவும் சோகமாக மாறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News