×

குளத்தில் டிக்டாக் எடுத்த இளைஞர் – நீரில் மூழ்கி உயிரிழப்பு !

கோவை அருகே குளத்தின் ஆழத்துக்கு சென்று டிக்டாக் வீடியோ எடுக்க நினைத்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கோவை வடுகம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற தறித்தொழிலாளியின் மகன் விக்னேஷ்வரன். இவர் தன் நண்பர்களுடன் கருத்தம்பட்டியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது செல்போனை எடுத்துக்கொண்டு ஆழத்திற்கு சென்ற அவர் நீரில் மூழ்கி இறந்து போனார். இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அவரது சடலத்தையும் செல்போனையும் மீட்டனர். செல்போனை பார்த்ததில் குளத்தில் ஆழமில்லாதப் பகுதியில் எடுத்த
 
குளத்தில் டிக்டாக் எடுத்த இளைஞர் – நீரில் மூழ்கி உயிரிழப்பு !

கோவை அருகே குளத்தின் ஆழத்துக்கு சென்று டிக்டாக் வீடியோ எடுக்க நினைத்த இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கோவை வடுகம்பாளையத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்ற தறித்தொழிலாளியின் மகன் விக்னேஷ்வரன். இவர் தன் நண்பர்களுடன் கருத்தம்பட்டியில் உள்ள குளத்திற்கு குளிக்க சென்றுள்ளார். அப்போது செல்போனை எடுத்துக்கொண்டு ஆழத்திற்கு சென்ற அவர் நீரில் மூழ்கி இறந்து போனார்.

இதையடுத்து அந்த இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் அவரது சடலத்தையும் செல்போனையும் மீட்டனர். செல்போனை பார்த்ததில் குளத்தில் ஆழமில்லாதப் பகுதியில் எடுத்த டிக் டாக் காட்சி இருந்தது. அதையடுத்து ஆழமான இடத்துக்கு சென்று டிக்டாக் எடுக்க முயன்றபோதுதான் அவர் இறந்தார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அவரது குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News