×

சாலையில் கட்டி உருண்ட குடிகாரரும் போலிஸ்காரரும் – வைரல் வீடியோ !

திருப்பூரில் சாலையில் குடிகாரர் ஒருவரும் போலிஸார் ஒருவரும் கட்டிப்புரண்டு சண்டை இட்டுக்கொண்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலையில் போக்குவரத்து காவல் துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி வழக்கம்போல வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதிக்கு வந்த சுந்தரமூர்த்தி எனும் இளைஞர் குடிபோதையில் இருப்பதாக சந்தேகம் எழவே அவரை ஊத சொல்லி சோதனை செய்துள்ளார். அதில் அவர் மது குடித்திருப்பது உறுதியாகவே அவர் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனால் கோபமான முரளி அவரிடம் வாக்குவாதத்தில்
 
சாலையில் கட்டி உருண்ட குடிகாரரும் போலிஸ்காரரும் – வைரல் வீடியோ !

திருப்பூரில் சாலையில் குடிகாரர் ஒருவரும் போலிஸார் ஒருவரும் கட்டிப்புரண்டு சண்டை இட்டுக்கொண்டது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசி சாலையில் போக்குவரத்து காவல்  துணை ஆய்வாளர் சுந்தரமூர்த்தி வழக்கம்போல வாகன சோதனை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்தப்பகுதிக்கு வந்த சுந்தரமூர்த்தி எனும் இளைஞர் குடிபோதையில் இருப்பதாக சந்தேகம் எழவே அவரை ஊத சொல்லி சோதனை செய்துள்ளார்.

அதில் அவர் மது குடித்திருப்பது உறுதியாகவே அவர் மேல் வழக்குப் பதிவு செய்துள்ளார். இதனால் கோபமான முரளி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பு வரை சென்றுள்ளது. இதனால் அருகில் உள்ள மற்றொரு காவலரான பொன்னண்ணனும் முரளியோடு சண்டைக்கு செல்ல காவலரும் குடிகாரரும் சாலையில் உருண்டு புறண்டு சண்டை போட்டுள்ளனர்.

இதனால் கோபமான பொன்னன்னன், முரளியை பிடித்து தரையில் தர தரவென்று இழுத்துக்கொண்டே சென்றார். இதைப் பார்த்த பொதுமக்கள் சிலர் போலீஸுக்கு எதிராகக் கோஷம் எழுப்பினர்.இந்த நிகழ்வுகளை அங்கிருந்த யாரோ வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பதிவேற்ற அது வேகமாகப் பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News