×

ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும்: அதிமுக எம்எல்ஏ சட்டசபையில் ஆவேசம்!

தமிழகத்தில் இருந்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் என சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் கோரிக்கை வைத்தார். இது சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது. சேலம் எட்டு வழிச்சாலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து வருகிறது. அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை
 
ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும்: அதிமுக எம்எல்ஏ சட்டசபையில் ஆவேசம்!

தமிழகத்தில் இருந்து ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை துரத்த வேண்டும் என சட்டசபையில் அதிமுக எம்எல்ஏ பரமசிவம் கோரிக்கை வைத்தார். இது சட்டசபையில் சிறிது நேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.

சேலம் எட்டு வழிச்சாலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்து வருகிறது. அண்மையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய வேடசந்தூர் அதிமுக எம்எல்ஏ பரமசிவம், ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பில் தவறான தகவல்களை பரப்புபவர்களின் விவரத்தை ஃபேஸ்புக் நிறுவனம் காவல்துறைக்கு தரவேண்டும். அப்படி மறுத்தால் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்பை தமிழகத்தில் இருந்து துரத்த வேண்டும் என்று கூறினார். இது அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது.

From around the web

Trending Videos

Tamilnadu News