×

பேஸ்புக்கில் ஃபேக் ஐடி… அப்பாவி பெண்களின் ஆபாச புகைப்படங்கள்… வாலிபரின் காம வெறி

அப்பாவி பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை போலி பேஸ்புக் கணக்கில் பகிர்ந்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர் கைஸ் முகமது(27). இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இவர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளார். மேலும், அவரின் தோழியின் மற்றும் வேறு
 
பேஸ்புக்கில் ஃபேக் ஐடி… அப்பாவி பெண்களின் ஆபாச புகைப்படங்கள்… வாலிபரின் காம வெறி

அப்பாவி பெண்களை ஆபாசமாக புகைப்படம் எடுத்து அதை போலி பேஸ்புக் கணக்கில் பகிர்ந்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரத்தில் வசித்து வருபவர் கைஸ் முகமது(27). இவர் ஒரு எம்.ஏ. பட்டதாரி. சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.

இவர் மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்ளாமலேயே ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். அப்போது அப்பெண்ணின் ஆபாச புகைப்படங்களை அவருக்கு தெரியாமல் எடுத்துள்ளார். மேலும், அவரின் தோழியின் மற்றும் வேறு சில பெண்களின் புகைப்படத்தையும் எடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்களை தனது போலி முகநூல் கணக்கு மூலம் பதிவேற்றி, அதற்கு கிடைக்கும் கமெண்டுகளை படித்து ரசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக ஒரு பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்பெண்ணுக்கும் முகமது கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சைபர் கிரைம் போலீசாரின் விசாரணையில் முகம்மதுவின் செல்போனில் இருந்தே போலி கணக்குகள் இயக்கப்பட்டது தெரியவந்தது. எனவே, அவரின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் அவரை மடக்கிப் பிடித்தனர்.

அவரது செல்போனை ஆராய்ந்ததில் அதில் ஏகப்பட்ட பெண்களின் ஆபாச புகைப்படங்கள் இருந்தது. அதில், பலரும் குடும்ப பெண்கள் ஆவர். இதைத் தொடர்ந்து அவரை 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News