×

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து – 4 ஆண்டு தடை?

Gomathi Marimuthu – ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரித்து ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தமிழக தடகள வீராங்கன கோமதி மாரித்து தங்கம் வென்று சாதனை படைத்தார். இந்நிலையில், அவர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அவரது சிறுநீர் சோதனை செய்யப்பட்ட போது அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர்
 
ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து – 4 ஆண்டு தடை?

Gomathi Marimuthu – ஆசிய சாம்பியன்ஷிப் தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற கோமதி மாரித்து ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் தோஹாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் தமிழக தடகள வீராங்கன கோமதி மாரித்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

இந்நிலையில், அவர் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளார். அவரது சிறுநீர் சோதனை செய்யப்பட்ட போது அவர் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை அவர் எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து – 4 ஆண்டு தடை?

ஆனால், இந்திய தடகள சம்மேளனத்தின் தலைவர் அடில்வேல் சுமாரிவல்லா தனக்கு எந்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

2வது கட்ட சோதனையிலும் கோமதி மாரிமுத்து ஊக்க மருந்து உட்கொண்டது உறுதியானால் அவரின் தங்க பதக்கம் பறிக்கப்படுவதோடு 4 ஆண்டுகள் தடையும் விதிக்கப்படும் என சில அதிகாரிகள் கூறி வருகின்றனர்.

ஆனால், இந்த குற்றச்சாட்டை கோமதி மாரிமுத்து மறுத்துள்ளார். தன் எப்போதும் ஊக்கமருந்து உட்கொண்டதில்லை என அவர் கூறியுள்ளார். அவரின் குடும்பத்தினரும் இதை மறுத்துள்ளனர்.

கோமதி மாரிமுத்துவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News