×

தமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு?

Gomathi Marimuthu – ஆசியக்கோப்பை ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்று திரும்பிய கோமதியை வரவேற்க தமிழக அமைச்சர்கள் யாரும் செல்லாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 23வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன் போட்டி சமீபத்தில் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில், 800 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். இன்று கோமதி மாரிமுத்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவரை விமான
 
தமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு?

Gomathi Marimuthu – ஆசியக்கோப்பை ஓட்டப்பந்தய போட்டியில் தங்கம் வென்று திரும்பிய கோமதியை வரவேற்க தமிழக அமைச்சர்கள் யாரும் செல்லாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

23வது சர்வதேச ஆசிய தடகள சாம்பியன் போட்டி சமீபத்தில் கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்றது. இதில், 800 மீட்டர் தடகளப் போட்டியில் தமிழகத்தின் திருச்சியை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார்.

தமிழகம் திரும்பிய கோமதி… ஒரு அமைச்சர் கூட செல்லவில்லை… அலட்சியப்படுத்துகிறதா அரசு?

இன்று கோமதி மாரிமுத்து விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் பலரும் கூடி உற்சாகமாக வரவேற்றனர். ஆனால், தமிழக அரசு சார்பில் அவரை வரவேற்க விளையாட்டுத்துறை அமைச்சரோ அல்லது வேறு அமைச்சரோ அல்லது குறைந்தபட்சம் விளையாட்டு துறையை சேர்ந்த முக்கிய அதிகாரிகளோ யாரும் செல்ல வில்லை.

தமிழகத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்து தடகளப்போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதியை அரசு பாராட்டியிருக்க வேண்டும். அவருக்கு தோல் கொடுத்து அவருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

ஆனால், விமான நிலையத்தில் அவரை வரவேற்க ஒரு அமைச்சர் கூட செல்லாதது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், கோமதிக்கு பண உதவி உட்பட எந்த சலுகையும் இன்னும் தமிழக அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News