×

நூடுல்ஸ் சாப்பிட்ட பசுமாடுகள் பலி – விழுப்புரத்தில் நடந்த அவலம் !

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் முந்திரிக்காட்டில் இருந்த காலாவதியான நூடுல்ஸ்களை தின்ற பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன. நூடுல்ஸ்களுக்கும் சர்ச்சைகளுக்கு உள்ள தொடர்பு விடவே விடாது போலிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதும், அதன் பின் தடை நீங்கி இப்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் இருந்து வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் முந்திரி காட்டிற்கு மேய்ச்சலுக்கு சென்ற
 
நூடுல்ஸ் சாப்பிட்ட பசுமாடுகள் பலி – விழுப்புரத்தில் நடந்த அவலம் !

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் முந்திரிக்காட்டில் இருந்த காலாவதியான நூடுல்ஸ்களை தின்ற பசுமாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளன.

நூடுல்ஸ்களுக்கும் சர்ச்சைகளுக்கு உள்ள தொடர்பு விடவே விடாது போலிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தில் நூடுல்ஸ் தடை செய்யப்பட்டதும், அதன் பின் தடை நீங்கி இப்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக நூடுல்ஸ் இருந்து வருகிறது.

இந்நிலையில் விழுப்புரத்தில் உள்ள கிராமம் ஒன்றில் முந்திரி காட்டிற்கு மேய்ச்சலுக்கு சென்ற பசு மாடுகள் அடுத்தடுத்து இறந்து விழுந்தது அதிர்ச்சியைக் கிளப்பியது. இதை மாட்டின் உரிமையாளர்கள் முந்திரி காட்டுக்கு சென்று பார்த்த போது அங்கு மூட்டை மூட்டையாக காலாவதியான நூடுல்ஸ்கள் இருந்துள்ளன. அதை சாப்பிட்ட மாடுகள் உயிரிழந்துள்ளன. காலாவதியான நூடுல்ஸ்களை எரித்து அழிக்காமல் இப்படி வீசியதால் 7 மாடுகள் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News