×

கிரேஸி மோகன் எப்படி இறந்தார்? – கதறும் சகோதரர் மாது பாலாஜி

Madhu Balaji on Grazy Mohan – கிரேஸிமோகன் மரணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரின் சகோதரரும், நாடக நடிகருமான மாது பாலாஜி தெரிவித்துள்ளார். நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரின் உடலுக்கு சினிமாத்துறையினர் நேற்று
 
கிரேஸி மோகன் எப்படி இறந்தார்? – கதறும் சகோதரர் மாது பாலாஜி

Madhu Balaji on Grazy Mohan – கிரேஸிமோகன் மரணம் குறித்து வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரின் சகோதரரும், நாடக நடிகருமான மாது பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாடக நடிகரும் கதையாசிரியருமான கிரேஸி மோகன் பல நாடகங்களை இயக்கி நடித்துள்ளார். நெஞ்சு வலி காரணமாக அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 10ம் தேதி மதியம் 2 மணியளவில் மரணமடைந்தார். அவரின் மரணம் திரையுலகினருக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவரின் உடலுக்கு சினிமாத்துறையினர் நேற்று காலை அஞ்சலி செலுத்தினர். அதன்பின் சென்னை பெசண்ட்நகர் மின் மயானத்தில் அவரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவரின் சகோதரரும், நாடகத்தில் அவருடன் நடிப்பவருமான மாது பாலாஜி ஒரு உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் சகோதரர் கிரேஸி மோகனின் மறைவுக்கு இரங்கல் மற்றும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி. நாங்கள் மிகப்பெரிய அதிர்ச்சியில் இருக்கிறோம். மோகனுக்கு இரத்த அழுத்தமோ, சர்க்கரை நோயோ எதுவுமே இல்லை. சமீபத்தில் கூட அவரின் உடலை முழு சோதனை செய்தோம். அவர் ஆரோக்கியமாகத்தான் இருந்தார். 10ம் தேதி காலை 7.30 மணிக்கு அவரை சந்தித்து பேசினேன். எப்போதும் போல் நகைச்சுவையுடன் என்னிடம் பேசினார். 9.45 மணிக்கு என்னை செல்போனில் அழைத்து தனக்கு நெஞ்சுவலிப்பதாக கூறினார். நான் உடனே அங்கு சென்று காரில் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றேன்.

அங்கிருந்த மருத்துவர் அவருக்கு சிறப்பான சிகிச்சையை அளித்தார். அவரை உயிரோடு மீட்டு வர முடிந்த வரை போராடினார். ஆனால், கடுமையான மாரடைப்பு காரணமாக அவர் மரணமடைந்துவிட்டார். எனவே, அவரை பற்றிய தேவையில்லாத வதந்திகளை பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

என அந்த வீடியோவில் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News