×

எத்தனை பேருதான் பொண்ணு பாக்க வருவீங்க? – இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

தன்னை பலரும் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படாததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி பாஸ்கர். இவரின் மகள் கிறிஸ்டி(26). கிறிஸ்டிக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட அவரின் பெற்றோர் பல இடத்திலும் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கிறிஸ்டினை பெண் பார்க்க பலரும் வந்தனர். ஆனால், திருமணம் நிச்சயிக்கப்படவில்லை. இதனால், கிறிஸ்டி விரக்தியில் இருந்துள்ளார். இந்நிலையில், நேற்று வீட்டில்
 
எத்தனை பேருதான் பொண்ணு பாக்க வருவீங்க? – இளம்பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு

தன்னை பலரும் பெண் பார்த்து திருமணம் நிச்சயிக்கப்படாததால் ஏற்பட்ட விரக்தி காரணமாக இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் வசித்து வருபவர் அந்தோணி பாஸ்கர். இவரின் மகள் கிறிஸ்டி(26). கிறிஸ்டிக்கு திருமணம் செய்து வைக்க ஆசைப்பட்ட அவரின் பெற்றோர் பல இடத்திலும் அவருக்கு மாப்பிள்ளை பார்த்து வந்தனர். கிறிஸ்டினை பெண் பார்க்க பலரும் வந்தனர். ஆனால், திருமணம் நிச்சயிக்கப்படவில்லை. இதனால், கிறிஸ்டி விரக்தியில் இருந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று வீட்டில் தனியாக இருந்தா கிறிஸ்டின் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அவரின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் அலறி துடித்தனர். அதன்பின் போலீசார் கிறிஸ்டினின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்வதற்காக அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விவகாரம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News