×

ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

பிரிந்து வாழும் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகேயுள்ள அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கோபி(26). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 4 வருடங்களுக்கு முன்பு மோகனேஸ்வரி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கோபிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. எனவே, தினமும் குடித்துவிட்டு வந்து மோனேஸ்வரியை அடித்து உதைத்து சித்தரவதை செய்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த
 
ராத்திரியெல்லாம் தூங்க விடாத கணவர் – இறுதியில் நேர்ந்த விபரீதம்

பிரிந்து வாழும் மனைவியை கணவனே கொலை செய்த சம்பவம் சேலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் அருகேயுள்ள அல்லிக்குட்டை கங்காபுதூர் பகுதியில் வசித்து வருபவர் கோபி(26). இவர் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். 4 வருடங்களுக்கு முன்பு மோகனேஸ்வரி என்கிற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

கோபிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. எனவே, தினமும் குடித்துவிட்டு வந்து மோனேஸ்வரியை அடித்து உதைத்து சித்தரவதை செய்துள்ளார். இதனால், விரக்தி அடைந்த மோகனேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனவே, தன்னுடன் மீண்டும் குடும்பம் நடத்த வருமாறு மோகனேஸ்வரியை கோபி அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில், மனைவியை நேரில் சந்தித்து பேச சென்ற கோபி, மோகனேஸ்வரி வேலைக்கு சென்று விட்டு திரும்பும் வழியில், ஆள் நடமாட்டம் இல்லாத முட் பதர் அருகே அவர் மறைத்து வந்திருந்த கத்தியுடன் காத்திருந்தார்.

மோகனேஸ்வரி வந்த போது தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால், குடிப்பழக்கத்தை நிறுத்தினால் மட்டுமே நான் வருவேன் என மோகனேஸ்வரி கூற, ஆத்திரமடைந்த கோபி கத்தியால் மோகனேஸ்வரியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில், மோகனேஸ்வரி சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துபோனார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகி விட்ட கோபியை தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News