×

தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

தன் மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம் கொண்டிருந்த கணவன் அவரை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த சமபவம் நடந்துள்ளது. சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் கிட்டப்பன் மற்றும் சுமதி. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிட்டப்பனுக்கு சுமதியின் நடத்தை மேல் சந்தேகம் எழுந்ததால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இதனால் சுமதி கோபித்துக்கொண்டு கடந்த 10 மாதங்களாக தனது தாயாரின் வீட்டில் வாழ்கிறார்.
 
தனியாக இருந்த மனைவியை சுத்தியலால் அடித்துக் கொலை செய்த கணவன் – பின்னணி என்ன ?

தன் மனைவியின் நடத்தையின் மேல் சந்தேகம் கொண்டிருந்த கணவன் அவரை சுத்தியலால் தாக்கிக் கொலை செய்த சமபவம் நடந்துள்ளது.

சென்னை பூந்தமல்லிக்கு அருகில் உள்ள காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த தம்பதிகள் கிட்டப்பன் மற்றும் சுமதி. இவர்களுக்கு 9 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கிட்டப்பனுக்கு சுமதியின் நடத்தை மேல் சந்தேகம் எழுந்ததால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்துள்ளது.

இதனால் சுமதி கோபித்துக்கொண்டு கடந்த 10 மாதங்களாக தனது தாயாரின் வீட்டில் வாழ்கிறார். சுமதி, தனது கணவர் மேல் அளித்த புகார் ஒன்றும் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இதையடுத்து நேற்று காலை சுமதியின் தாயார் வீட்டுக்கு சென்ற கிட்டப்பன் வழக்கம்போல சுமதியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் அவர்களின் வாக்குவாதம் முற்றியுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமான கிட்டப்பன் சுத்தியலால் சுமதியின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர் அவர்து கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

தகவலறிந்த போலீஸார் வந்து சுமதியின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். கொலை செய்த கிட்டப்பன் பூந்தமல்லி போலிஸ் ஸ்டேஷனில் சரணடைந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News