×

கல்யாணம் ஒரே வாரத்தில் கள்ளத்தொடர்பு – கண்டுபிடித்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம் !

சென்னை திரிசூலத்தில் கல்யாணமான ஒரே வாரத்தில் தனது கணவரின் காதல் லீலைகளைக் கண்டுபிடித்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. சென்னை திரிசூலத்தை சேர்ந்தவர் அபின்ஷா. இவர் மனீஷா என்ற பெண்ணை 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் நாட்கள் ஆனபின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளாலமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனீஷா கர்ப்பமாகியுள்ளார். இதையறிந்த உறவினர்கள் காதலர்கள் இருவரையும்
 
கல்யாணம் ஒரே வாரத்தில் கள்ளத்தொடர்பு – கண்டுபிடித்த மனைவிக்கு நேர்ந்த விபரீதம் !

சென்னை திரிசூலத்தில் கல்யாணமான ஒரே வாரத்தில் தனது கணவரின் காதல் லீலைகளைக் கண்டுபிடித்த மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சென்னை திரிசூலத்தை சேர்ந்தவர் அபின்ஷா. இவர் மனீஷா என்ற பெண்ணை 5 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்துகொள்ளலாம் என முடிவெடுத்த இருவரும் வீட்டை விட்டு வெளியேறி உறவினர் ஒருவர் வீட்டில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால் நாட்கள் ஆனபின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ளாலமலேயே வாழ்ந்து வந்துள்ளனர். இதனால் மனீஷா கர்ப்பமாகியுள்ளார்.

இதையறிந்த உறவினர்கள் காதலர்கள் இருவரையும் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளனர். கடந்த ஒரு வாரத்துக்கு முன் இருவருக்கும் இடையே திருமணம் நடந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மனீஷா தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டதாக அவரது தந்தைக்கு அபின்ஷா தகவல் அளித்துள்ளார்.

இறுதிச்சடங்குக்கு வந்த உறவினர்கள் அபின்ஷா மேல் சந்தேகமடைந்து அவரது மொபைல் போனை சோதனை இட்டதில் அவருக்கு அனிதா என்ற பெண்ணோடு தொடர்பு இருந்தது தெரிந்துள்ளது, இந்த உண்மையைக் கண்டுபிடித்ததால் தான் மனீஷாவைக் கொன்று தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News