×

பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை – மகளிர் ஆணையம் அதிரடி

Pollachi Jayaraman : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக துணை சபாநாயகர் ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்துவோம் என மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
 
பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களிடம் விசாரணை – மகளிர் ஆணையம் அதிரடி

Pollachi Jayaraman : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக துணை சபாநாயகர் ஜெயராமன் மகன்களிடம் விசாரணை நடத்துவோம் என மாநில மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில், கல்லூரி மாணவிகளை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள் போராட்டங்களை ஆரம்பித்து இருப்பதால் சிக்கலாக மாறிய பொள்ளாச்சி பலாத்கார கொடூர வழக்கு சிபிசிஐடி கைக்கு மாறியுள்ளது.

ஆனால், இந்த விவகாரத்தை மகளிர் ஆணையம் கண்டுகொள்ளவில்லை என புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து, தேசிய மகளிர் ஆணையம் இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளது. மேலும், மகளிர் ஆணையத் தலைவி கண்ணகி பாக்கியநாதன் விசாரணை நடத்தினார்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “ பாதிக்கப்பட்ட பெண்களின் விபரங்கள் தெரியாமல் பாரபட்சம் இல்லாமல் விசாரணை நடத்துவோம்… தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமன் மகனிடம் விசாரணை நடத்துவோம். இது தொடர்பாக 044 – 28592750 என்ற எண்ணுக்கு பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்கலாம்”.

From around the web

Trending Videos

Tamilnadu News