×

சசிகலா இறந்துவிட்டாரா? முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை டுவீட்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனங்களை வாங்கிக்கட்டி கொள்வது வழக்கம். பாகிஸ்தான் அரசியலிலேயே வெற்றி பெற முடியாத அவர், இந்திய அரசியலை குறிப்பாக தமிழக அரசியல் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய டுவீட்டை பதிவு செய்துள்ளார் அதாவது தென்னிந்தியாவின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டதாகவும், அவருடைய வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இவர் ஒரு பாடம் என்றும் பதிவு
 
சசிகலா இறந்துவிட்டாரா? முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை டுவீட்

சசிகலா இறந்துவிட்டாரா? முன்னாள் கிரிக்கெட் வீரரின் சர்ச்சை டுவீட்பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான் அவ்வப்போது டுவிட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து கண்டனங்களை வாங்கிக்கட்டி கொள்வது வழக்கம். பாகிஸ்தான் அரசியலிலேயே வெற்றி பெற முடியாத அவர், இந்திய அரசியலை குறிப்பாக தமிழக அரசியல் குறித்து ஒரு சர்ச்சைக்குரிய டுவீட்டை பதிவு செய்துள்ளார்

அதாவது தென்னிந்தியாவின் பிரபல நடிகையும் அரசியல்வாதியுமான சசிகலா இறந்துவிட்டதாகவும், அவருடைய வீட்டில் இருந்து கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகளும் பணமும் கைப்பற்றப்பட்டதாகவும், ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு இவர் ஒரு பாடம் என்றும் பதிவு செய்துள்ளார்

இந்த டுவீட்டுக்கு ஒரு பத்திரிகையாளர் பதிலளித்து, ‘நீங்கள் பதிவு செய்த டுவீட் முற்றிலும் தவறானது. சசிகலா என்பவர் ஜெயலலிதாவின் தோழி. ஜெயலலிதாதான் நடிகை மற்றும் அரசியல்வாதி. சசிகலா தற்போது பெங்களூரு சிறையில் உள்ளார். இனிமேலாவது ஒரு முதிர்ச்சியான அரசியல்வாதியாக மாறுங்கள்’ என்று காட்டமாக பதிலளித்துள்ளார்.

இதன்பின்னர் தனது தவறை உணர்ந்து இம்ரான்கான் டுவீட்டை டெலிட் செய்துவிட்டார். இருப்பினும் அவருடைய தவறான டுவீட்டுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News