×

நித்யானந்தாவுடன் நான் இருக்கும் புகைப்படம் உண்மையா ? – கொதித்தெழுந்த சின்மயி !

நித்னாயந்தாவோடு பாடகி சின்மயியும் அவரது தாயாரும் இருப்பது போன்ற புகைப்படம் உண்மை இல்லை என அவர் தெரிவித்துள்ளார். பாடகி சின்மயி மீடூ புகாரினை பெருமளவில் தமிழகத்தில் கொண்டு சென்றதை அடுத்து அவர் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் மோசடி சாமியார் நித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது. இந்த புகைப்படம் உண்மையில்லை என அவர் கூறி அதன் உண்மையான புகைப்படத்தை பகிர்ந்தாலும் நெட்டிசன்கள் நிறுத்தவில்லை.
 
நித்யானந்தாவுடன் நான் இருக்கும் புகைப்படம் உண்மையா ? – கொதித்தெழுந்த சின்மயி !

நித்னாயந்தாவோடு பாடகி சின்மயியும் அவரது தாயாரும் இருப்பது போன்ற புகைப்படம் உண்மை இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி மீடூ புகாரினை பெருமளவில் தமிழகத்தில் கொண்டு சென்றதை அடுத்து அவர் சமூகவலைதளங்களில் அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலர் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் அவர் மோசடி சாமியார் நித்யானந்தாவிடம் ஆசிர்வாதம் வாங்குவது போன்ற புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.

இந்த புகைப்படம் உண்மையில்லை என அவர் கூறி அதன் உண்மையான புகைப்படத்தை பகிர்ந்தாலும் நெட்டிசன்கள் நிறுத்தவில்லை. மறுபடியும் அந்த பகைப்படத்தை பலர் பகிர்ந்து அவரைக் கேலி செய்து வந்தனர். இதனால் விரக்தியடைந்த சின்மயி ‘ இந்த புகைப்படம் உண்மையில்லை என நான் நிரூபித்து விட்டேன். இருந்தும் ஏன் இதை திரும்ப திரும்ப பகிர்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதெல்லாம் யாராவது காசு கொடுத்து செய்கிறார்களா என்று தெரியவில்லை’ எனப் புலம்பும் தொனியில் சொல்லியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News