×

கௌதம் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை – என்ன ஆகும் குயின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சினிமாவாக எடுத்து வரும் நிலையில் கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் குயின் எனும் பெயரில் வெப் சீரிஸ் ஒன்றும் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.அதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார் இந்நிலையில் இப்போது இந்த வெப் சீரிஸ் பற்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு அரசியல்
 
கௌதம் மேனனுக்கு ஜெயலலிதா அண்ணன் மகன் எச்சரிக்கை – என்ன ஆகும் குயின்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழக்கை வரலாற்றை ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சினிமாவாக எடுத்து வரும் நிலையில் கௌதம் மேனன் மற்றும் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் குயின் எனும் பெயரில் வெப் சீரிஸ் ஒன்றும் உருவாகி வருகிறது. சமீபத்தில் இதன் முதல் பார்வை போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.அதில் ஜெயலலிதாவாக ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார்

இந்நிலையில் இப்போது இந்த வெப் சீரிஸ் பற்றி ஜெயலலிதாவின் அண்ணன் மகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஒரு அரசியல் தலைவரை மையமாக வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரிஸை கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி வருவதாகவும், அதில் ரம்யா கிருஷ்ணன் நாயகியாக நடிப்பதாகவும் ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன். என் அத்தை ஜெயலலிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து ’தலைவி’ என்ற பெயரில் தான் எடுத்து வரும் படத்தின் கதையை என்னிடம் கூறிய இயக்குநர் விஜய் படத்தைத் தொடங்குவதற்கு தடையில்லாச் சான்றிதழும் பெற்றுச் சென்றார்.

இந்த சூழலில், இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் ஒரு அரசியல் தலைவரைப் பற்றிய தன்னுடைய புதிய வெப் சீரிஸ் பற்றி அறிவித்துள்ளார். அந்த அரசியல் தலைவர் யார் என்பது குறித்து எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் ஊடகங்களிடம் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் குடும்பத்தின் அனுமதியின்றி ஏதேனும் ஒரு படமோ அல்லது ஒரு வெப் சீரிஸோ என்னுடைய அத்தை ஜெயலலிதாவை மையமாக வைத்து எடுக்கப்பட்டால் அதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டு கையாள்வோம். யார் ’குயின்’ என்பதை கௌதம் மேனன் தெளிவுபடுத்துவார் என்று நம்புகிறேன்.

From around the web

Trending Videos

Tamilnadu News