×

தமிழில் பேசுங்கள்.. பீட்டர் விட்ட விஷாலுக்கு கொட்டு வைத்த நீதிபதி..

Judge instructed Vishal to speak in tamil – நீதிமன்றத்தில் தமிழில் பேசுங்கள் நடிகர் விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சேவை வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஷால் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களும் சிக்கியதால் வருமான வரித்துறையினர் விஷாலுக்கு சம்மன் அனுப்பினர். ஆனால், விஷால் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே, விஷாலுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில்
 
தமிழில் பேசுங்கள்.. பீட்டர் விட்ட விஷாலுக்கு கொட்டு வைத்த நீதிபதி..

Judge instructed Vishal to speak in tamil – நீதிமன்றத்தில் தமிழில் பேசுங்கள் நடிகர் விஷாலுக்கு நீதிபதி அறிவுறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு விஷாலின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சேவை வரித்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது, விஷால் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களும் சிக்கியதால் வருமான வரித்துறையினர் விஷாலுக்கு சம்மன் அனுப்பினர்.

ஆனால், விஷால் சரியான விளக்கம் அளிக்கவில்லை. எனவே, விஷாலுக்கு எதிராக பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே, கடந்த ஒரு வருடமாக விஷால் நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

இந்நிலையில், விஷாலுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்பட்டதால் நேற்று எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். அப்போது, கடந்த முறை சம்மன் அனுப்பப்பட்ட போது நீங்கள் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதி மலர்மதி விஷாலிடம் கேட்டார். அதற்கு விஷால் ஆங்கிலத்தில் பதிலளிக்க தொடங்கினார். அப்போது குறிக்கிட்ட நீதிபதி ‘உங்களுக்கு தமிழ் தெரிந்தால் தமிழேலேயே பேசுங்கள்’ எனக்கூறினார். அதன்பின் விஷால் தமிழிலேயே விளக்கம் அளித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News