×

மீ டூ இயக்கம் போல் ஆக்கி விட்டனர் – சிவகுமார் விவாகரம் குறித்து கார்த்தி பேட்டி

திருமண விழாவில் நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டி விட்ட விவகாரம் குறித்து அவரின் மகனும், நடிகருமான கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு (2018) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராகுல் என்பவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சிவகுமார் ஒரு வீடியோ பதிவின் மூலம் வருத்தமும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ராகுலுக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதிய போனையும் சிவகுமார் சார்பாக நேரில்
 
மீ டூ இயக்கம் போல் ஆக்கி விட்டனர் – சிவகுமார் விவாகரம் குறித்து கார்த்தி பேட்டி

திருமண விழாவில் நடிகர் சிவக்குமார் செல்போனை தட்டி விட்ட விவகாரம் குறித்து அவரின் மகனும், நடிகருமான கார்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு (2018) மதுரையில் தனியார் கருத்தரிப்பு மையத்தின் திறப்பு விழாவில் கலந்துகொண்ட நடிகர் சிவகுமார், தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ராகுல் என்பவரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டதால் சர்ச்சையானது. அதனைத் தொடர்ந்து சிவகுமார் ஒரு வீடியோ பதிவின் மூலம் வருத்தமும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, ராகுலுக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதிய போனையும் சிவகுமார் சார்பாக நேரில் வழங்கப்பட்டது.

அதேபோல், ஒரு திருமண விழாவில் தன்னுடன் செல்ஃபி எடுக்க முயன்ற ஒருவரின் செல்போனை சிவக்குமார் தட்டிவிட்டார். அந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. ஆனால், அந்த விவகாரம் குறித்து சிவக்குமாரோ, அவரின் குடும்பத்தினரோ கருத்து தெரிவிக்கவே இல்லை.

இந்நிலையில், இதுபற்றி கருத்து தெரிவித்த கார்த்தி “என் தந்தை அவரின் கோபத்தை கட்டுப்படுத்தியிருக்கலாம். அதேநேரம், திருமண தம்பதியை சந்தித்து விட்டு வந்தபின் என் தந்தையிடம் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம் என உதவியாளர் கூறிய பின்பும், விரட்டி செல்பி எடுத்தது தவறு. மேலும், அதை வீடீயோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ததும் தவறு. இதை மீ டூ புகார் போல் ஆக்கிவிட்டனர்” எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News