×

15 ஆண்களை திருமணம் செய்த கில்லாடி பெண் – 16வது கணவர் புகார்

திருச்சியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார்(35). ஏற்கனவே திருமணமாக விவாகரத்தான இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். 2017ம் ஆண்டு மகாலட்சுமி என்கிற பெண்ணை மேட்ரிமோனியல் மூலம் 2ம் திருமணம் செய்து கொண்டார். மன்னார்குடி வ.உசி.நகரில் இருவரும் குடியேறினர். சில நாட்களுகு பின் உதயகுமார் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் சென்று சில மாதங்கள் கழித்து அவரை
 
15 ஆண்களை திருமணம் செய்த கில்லாடி பெண் – 16வது கணவர் புகார்

திருச்சியை சேர்ந்த ஒரு பெண் பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்ததோடு, அவர்களை மிரட்டி பணம் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மன்னார்குடியை சேர்ந்தவர் உதயகுமார்(35). ஏற்கனவே திருமணமாக விவாகரத்தான இவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். 2017ம் ஆண்டு மகாலட்சுமி என்கிற பெண்ணை மேட்ரிமோனியல் மூலம் 2ம் திருமணம் செய்து கொண்டார்.

மன்னார்குடி வ.உசி.நகரில் இருவரும் குடியேறினர். சில நாட்களுகு பின் உதயகுமார் மீண்டும் சிங்கப்பூருக்கு சென்றுவிட்டார். அவர் சென்று சில மாதங்கள் கழித்து அவரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட மகாலட்சுமி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த உதயகுமார் மனைவியை பார்க்க ஆசை ஆசையாக மன்னார்குடி வந்துள்ளார். ஆனால், வீடு பூட்டிக் கிடந்தது. மேலும், வீட்டில் எந்த பொருட்களும் இலை. மகாலட்சுமியின் செல்போனும் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால், மனைவியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

15 ஆண்களை திருமணம் செய்த கில்லாடி பெண் – 16வது கணவர் புகார்

ஏதேச்சையாக மனைவியின் மின்னஞ்சலை பார்த்த உதயகுமாருக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தது. ஏனெனில், அவர் மகாலட்சுமி பல ஆண்ளுடன் தொடரில் இருப்பதும், ஏற்கனவே 15 பேரை திருமணம் செய்துள்ளார் என்பதும் தெரியவந்தது. ஒவ்வொருவர் மூலமாகவும் தான் கர்ப்பமாகும் போது, கருக்கலைப்பு செய்துவிட்டு, கணவர்தான் எட்டி உதைத்து கருக்கலைப்பு ஆனது என புகார் அளிப்பேன் எனக்கூறி மிரட்டி பணம் பறித்துள்ளார். இதையே அடுத்த ஆணிடம் காரணமாக கூறி பரிதாபத்தை சம்பாதித்து திருமணம் செய்து நகை, பணம் ஆகியற்றை பறித்து சென்றுள்ளார். இப்படித்தான் 16வதாக உதயகுமார் சிக்கியுள்ளார். இது தொடர்பாக போலீசாரிடம் உதயகுமார் புகார் அளித்துள்ளார். ஆனால், பெரிய இடத்து சிபாரிசு இருப்பதால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திருச்சியில் நேற்று செய்தியாளர்களை சந்திந்த உதயகுமர், மகாலட்சுமி தன்னை ஏமாற்றி 25 பவுன் நகை, ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டி கொண்டு ஆந்திராவுக்கு சென்றுவிட்டதாக கூறினார். அங்கு ஒரு தொழிலதிபரை ஏமாற்றி பணம் பறிக்கவே சென்றுள்ளார். அவர் பலருடன் தொடர்பில் இருந்ததற்கான ஆதாரங்களை வைத்திருக்கிறேன். அவரால் இன்னும் பல ஆண்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே போராடுகிறேன் எனக்கூறினார்.

From around the web

Trending Videos

Tamilnadu News