×

லாரன்ஸின் உதவியாளர் நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..

Ragava Lawrence – நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸின் உதவியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளரக பணிபுரிந்து வந்தவர் பரத். மின்சார கனவுகள் என்கிற படத்திலும் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 35 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சென்னை விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார். இந்நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம்
 
லாரன்ஸின் உதவியாளர் நடன இயக்குனர் தூக்கிட்டு தற்கொலை..

Ragava Lawrence – நடிகரும், நடன இயக்குனருமான ராகவா லாரன்ஸின் உதவியாளர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் ராகவா லாரன்ஸிடம் உதவியாளரக பணிபுரிந்து வந்தவர் பரத். மின்சார கனவுகள் என்கிற படத்திலும் அவர் கதாநாயகனாக நடித்துள்ளார். 35 வயதான இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. அவர் சென்னை விருகம்பாக்கத்தில் நண்பர்களுடன் தங்கி இருந்தார்.

இந்நிலையில், திடீரென அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் அவரது குடும்பம் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சினிமாவில் தன்னால் பெரிய அளவுக்கு வர முடியவில்லை என அவர் அடிக்கடி நண்பர்களிடம் புலம்பி வந்ததாக கூறப்படுகிறது. எனவே, விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள்.

From around the web

Trending Videos

Tamilnadu News