×

ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் ரெடி.. பீதியை கிளப்பும் காவல்துறை

தமிழகத்தில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராகி வருவதாகவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். ஆபாச படம் என்பது தியேட்டர்களில் துவங்கி, இண்டர்நெட் மையங்களுக்கு மாறி தற்போது செல்போனுக்கு மாறியுள்ளது. தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டதால் இணையத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை சுலபமாக பார்க்க முடிகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியா, குழந்தைகள் ஆபாச படங்கள்
 
ஆபாச படம் பார்ப்பவர்கள் லிஸ்ட் ரெடி.. பீதியை கிளப்பும் காவல்துறை

தமிழகத்தில் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியல் தயாராகி வருவதாகவும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தமிழக காவல்துறை டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.

ஆபாச படம் என்பது தியேட்டர்களில் துவங்கி, இண்டர்நெட் மையங்களுக்கு மாறி தற்போது செல்போனுக்கு மாறியுள்ளது. தற்போது எல்லோர் கையிலும் ஸ்மார்ட்போன் வந்துவிட்டதால் இணையத்தை பயன்படுத்தி ஆபாச வீடியோக்களை சுலபமாக பார்க்க முடிகிறது. இதனால், குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்திருப்பதாக கருதப்படுகிறது. அதன் தொடர்ச்சியா, குழந்தைகள் ஆபாச படங்கள் தொடர்பான 5 ஆயிரம் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குழந்தைகள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்களில் அதிகமானோர் சென்னையை சார்ந்தவர்கள் என செய்திகள் பரவி வருகிறது. இதுபற்றி விளக்கம் அளித்த குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு டிஜிபி ரவி ‘ சென்னை முதலிடம் எனக்கூற முடியாது. ஆனால், சென்னையில் அதிகம் பேர் பார்க்கின்றனர். அவர்களின் பட்டியல் தயாராகி வருகிறது. அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் அவர்களுக்கு மனநல சிகிச்சை எடுக்கப்படும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் செல்போன் மற்றும் கம்ப்யூட்டர்களில் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News