×

மழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் !

வேலூரில் சாண் எரிவாயுக்காக வெட்டப்பட்ட குழிகளில் விழுந்து ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மரணமடந்துள்ளனர். வேலூரில் கடந்த வாரம் முழுவதும் கடுமையான மழைப் பெய்து வருகிறது. இதனால் அங்கு சாலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. வேலூர் மாவட்டம் ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசித்து வருகிறார் வேலு. இவரது மகள்களான ஹரிணி(6) மற்றும் பிரித்திகா (3) ஆகிய இருவரும் சாலைகளில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர். அங்கு சாண எரிவாயுவுக்கக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பி இருக்க அதைக் கவனிக்காமல்
 
மழைநீரில் விளையாடிய சிறுமிகள் – குழிக்குள் விழுந்து மரணம் !

வேலூரில் சாண் எரிவாயுக்காக வெட்டப்பட்ட குழிகளில் விழுந்து ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் மரணமடந்துள்ளனர்.

வேலூரில் கடந்த வாரம் முழுவதும் கடுமையான மழைப் பெய்து வருகிறது. இதனால் அங்கு சாலைகளில் தண்ணீர் நிரம்பியுள்ளது. வேலூர் மாவட்டம் ஏரியூர் கொல்லைமேடு பகுதியில் வசித்து வருகிறார் வேலு. இவரது மகள்களான ஹரிணி(6) மற்றும் பிரித்திகா (3) ஆகிய இருவரும் சாலைகளில் ஓடிப்பிடித்து விளையாடிக்கொண்டு இருந்துள்ளனர்.

அங்கு சாண எரிவாயுவுக்கக வெட்டப்பட்டிருந்த குழியில் நீர் நிரம்பி இருக்க அதைக் கவனிக்காமல் இருவரும் அதில் தவறி விழுந்துள்ளனர். இதற்கிடையில் மகள்களைக் காணாததால் பெற்றோரும் உறவினர்களும் அவர்களைத் தேட குழந்தைகள் இருவரும் குழிக்குள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒரேக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுமிகள் இருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது சம்மந்தமாக வழக்குப்பதிவு செய்த போலிஸார் அந்தக் குழியை உடனடியாக மூட உத்தரவிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News