×

கள்ளக்காதலுடன் தனிமையில் இருந்த பெண் – வீட்டைப் பூட்டிய மாமனார் !

புதுக்கோட்டையில் தனது கள்ளக்காதலனுடன் இருந்த மருமகளைக் கையும் களவுமாகப் பிடிக்க வீட்டின் கதவைப் பூட்டியுள்ளார் மாமனார். புதுக்கோட்டையைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர் கணவர் வெளிநாடு சென்று விட்டதால் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் மேல் அதிக அன்பு கொண்ட கணவர் வெளிநாட்டில் தான் சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் இவர் பேருக்கே அனுப்பி வைத்துள்ளார். மேலும் இவருக்காக தனியாக ஒரு வீடும் வாங்கிக் கொடுத்துள்ளார். ஆனால் சுலோச்சனாவோ அந்தப் பகுதியில் வசிக்கும் வேறு ஒரு இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்திக்
 
கள்ளக்காதலுடன் தனிமையில் இருந்த பெண் – வீட்டைப் பூட்டிய மாமனார் !

புதுக்கோட்டையில் தனது கள்ளக்காதலனுடன் இருந்த மருமகளைக் கையும் களவுமாகப் பிடிக்க வீட்டின் கதவைப் பூட்டியுள்ளார் மாமனார்.

புதுக்கோட்டையைச் சேர்ந்த சுலோச்சனா என்பவர் கணவர் வெளிநாடு சென்று விட்டதால் தனிமையில் வாழ்ந்து வருகிறார். இவர் மேல் அதிக அன்பு கொண்ட கணவர் வெளிநாட்டில் தான் சம்பாதிக்கும் எல்லாப் பணத்தையும் இவர் பேருக்கே அனுப்பி வைத்துள்ளார். மேலும் இவருக்காக தனியாக ஒரு வீடும் வாங்கிக் கொடுத்துள்ளார்.

ஆனால் சுலோச்சனாவோ அந்தப் பகுதியில் வசிக்கும் வேறு ஒரு இளைஞருடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த செய்தி அரசல் புரசலாக அவரது மாமனாரின் காதுகளுக்கு செல்ல, சுலோச்சனாவின் வீட்டுக்கு சென்றுள்ளார் அவர். அப்போது அவர் தன் காதலனுடன் உள்ளே இருப்பதை உறுதி செய்துகொண்டு வெளிக்கதவைப் பூட்டியுள்ளார்.

இதனால் பயந்துபோன சுலோச்சனா பின் வாசல் வழியாக வெளியேறி தப்பியுள்ளார். இதையடுத்து சுலோச்சனா மீது காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News