×

தற்கொலைக்கு திட்டமிட்ட காதல் ஜோடி.. மனம் மாறிய காதலன். முடிவில் நேர்ந்த விபரீதம்

Suicide attempt – தற்கொலைக்கு முயன்று மனம் மாறிய காதலன் காதலியை கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சுமர்சிங்கும், காஜல் என்கிற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கும், கமர்சிங்கை திருமணம் செய்வதற்கும் காஜலின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காஜலுக்கு மாப்பிள்ளை தேடும் முயற்சியிலும் இறங்கினர். எனவே, இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என சுமர்சிங்கை காஜல் வற்புறுத்தியுள்ளார். தற்கொலையில் விருப்பம் இல்லை
 
தற்கொலைக்கு திட்டமிட்ட காதல் ஜோடி.. மனம் மாறிய காதலன். முடிவில் நேர்ந்த விபரீதம்

Suicide attempt – தற்கொலைக்கு முயன்று மனம் மாறிய காதலன் காதலியை கொலை செய்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சுமர்சிங்கும், காஜல் என்கிற பெண்ணும் கடந்த 3 ஆண்டுகளக காதலித்து வந்தனர். இந்த காதலுக்கும், கமர்சிங்கை திருமணம் செய்வதற்கும் காஜலின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், காஜலுக்கு மாப்பிள்ளை தேடும் முயற்சியிலும் இறங்கினர்.

எனவே, இருவரும் தற்கொலை செய்து கொள்வோம் என சுமர்சிங்கை காஜல் வற்புறுத்தியுள்ளார். தற்கொலையில் விருப்பம் இல்லை என்றாலும் காஜலின் வற்புறுத்தலால் சுமர்சிங்கும் இதற்கு சம்மதித்துள்ளார்.

தற்கொலைக்கு திட்டமிட்ட காதல் ஜோடி.. மனம் மாறிய காதலன். முடிவில் நேர்ந்த விபரீதம்

இதைத் தொடர்ந்து, திருவல்லிக்கேணி பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து இருவரும் தங்கினர். தயாராக இருந்த சயனைடு கலந்த குளிர்பானத்தை இருவரும் குடித்துள்ளனர். ஆனால், திடீரென சுமர்சிங் இருந்து துப்பிவிட்டார். மேலும், காஜலும் இறக்கவில்லை.

எனவே, காஜல் பிழைத்தால் மீண்டும் தன்னை தற்கொலைக்கு வற்புறுத்துவார் என நினைத்த சுமர்சிங், காஜலின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார். பின்னர் மயக்கம் வந்தது போல் நடித்து லாட்ஜ் ஊழியருக்கு தகவல் கொடுத்தார். அதன்பின் சுமர்சிங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரின் உடலில் விஷம் இல்லை.

மேலும், போலீசாரின் விசாரணையில் சுமர்சிங் முன்னுக்கு பின் பேசியதில் சிக்கிவிட்டார். இந்த சம்பவம் கடந்த மாதம் 10ம் தேதி இரவு நடந்துள்ளது. காஜலின் பிரேத பரிசோதனையில், விஷம் அருந்தியும், கழுத்து நெறிக்கப்பட்டும் மரணமடைந்தது உறுதியானதால் சுமர்சிங் சிக்கியுள்ளார்.  இதையடுத்து அவரை சிறையில் அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News