×

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் பிரபல வாரிசு நடிகைக்கு நகைகளை கொடுத்தது தெரியவந்துள்ளது. திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் முருகன், சுரேஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட முருகன் கொள்ளையடித்த பணத்தில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்துள்ளான். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. அடுத்து ஒரு படத்தை தயாரித்த போது போலீசார் அவரை கைது செய்தனர். எனவே,
 
நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் நகைகளை கொள்ளையடித்த பிரபல கொள்ளையன் முருகன் பிரபல வாரிசு நடிகைக்கு நகைகளை கொடுத்தது தெரியவந்துள்ளது.

திருச்சியில் உள்ள லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவத்தில் முருகன், சுரேஷ் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். சினிமா தயாரிப்பதில் ஆர்வம் கொண்ட முருகன் கொள்ளையடித்த பணத்தில் தெலுங்கு படம் ஒன்றை தயாரித்துள்ளான். ஆனால், அப்படம் வெளியாகவில்லை. அடுத்து ஒரு படத்தை தயாரித்த போது போலீசார் அவரை கைது செய்தனர். எனவே, அப்படம் பாதியிலேயே நின்றது. சிறையிலிருந்து வெளியே வந்த முருகன் மீண்டும் மீண்டும் கொள்ளை அடித்து உல்லாசமாக வாழ்ந்துள்ளான்.

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

போலீசாரின் விசாரணையில் விஜயோடு ஒரு திரைப்படத்திலும் மற்றும் சிவகார்த்திகேயனோடு 2 படங்களிலும் நடித்த வாரிசு நடிகையிடம் முருகன் கால்ஷூட் கேட்டுள்ளான். இதற்காக ஹைதராபாத் சென்று முருகனும், சுரேஷும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால், தன்னிடம் தற்போது கால்ஷீட் இல்லை என அந்த நடிகை கூறியுள்ளார்., நாங்கள் நகைக்கடை வைத்திருக்கிறோம் என முருகன் கூற அந்த நடிகை ‘அப்படியா?’ என ஆச்சர்யமாக கேட்டாராம். அதன்பின் கொள்ளையடித்த நகைகளில் சிலவற்றை அவருக்கு பரிசாக முருகன் கொடுக்க, ஆசையாக அதை நடிகை வாங்கிக் கொண்டார் என முருகன் வாக்குமூலம் அளித்துள்ளான்.

நகைக்கு ஆசைப்பட்டு மாட்டிக்கிச்சே… வாரிசு நடிகைக்கு இது தேவையா?..

எனவே, அவரிடம் போலீசார் விசாரணை நடத்த வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News