×

கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி !

சென்னையை அடுத்த திருவள்ளூர் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண் அதேப் பகுதியில் உள்ள தினேஷ் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். இருவரும் உயிருக்குயிராகக் காதலித்ததை அடுத்து வீட்டுக்குத் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர். காதல் வேகத்தில் இருவரும் எல்லை மீற நந்தினி கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனை உடனடியாக அவர் தினேஷிடம் தெரிவித்துள்ளார். அதற்கு இது வெளியே தெரிந்தால் இரு குடும்பத்தாருக்கும் அசிங்கம், அதனால் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
 
கர்ப்பத்தைக் கலைக்க சொல்லி ஏமாற்றிய காதலன் – பழிவாங்க தற்கொலை செய்து கொண்ட காதலி !

சென்னையை அடுத்த திருவள்ளூர் பகுதியில் வசிக்கும் நந்தினி என்ற பெண் அதேப் பகுதியில் உள்ள தினேஷ் என்ற இளைஞரைக் காதலித்துள்ளார். இருவரும் உயிருக்குயிராகக் காதலித்ததை அடுத்து வீட்டுக்குத் தெரியாமல் பல இடங்களுக்கு சென்று சுற்றியுள்ளனர்.

காதல் வேகத்தில் இருவரும் எல்லை மீற நந்தினி கடந்த ஏப்ரல் மாதம் கர்ப்பமாகியுள்ளார். இதனை உடனடியாக அவர் தினேஷிடம் தெரிவித்துள்ளார். அதற்கு இது வெளியே தெரிந்தால் இரு குடும்பத்தாருக்கும் அசிங்கம், அதனால் கர்ப்பத்தைக் கலைத்துவிட்டுக் கல்யாணம் செய்து கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். அவரின் பேச்சை நம்பிய நந்தினி கர்ப்பத்தைக் கலைத்துள்ளார்.

ஆனால் அதன் பிறகு தினேஷின் போக்குகள் மாறியுள்ளன. நந்தினியோடு பழகுவதை வெகுவாகக் குறைத்துள்ளார். ஒரு நாள் திடீரென்று நந்தினியை அழைத்த தினேஷ் தனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாக சொல்லியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த நந்தினி கடந்த 19 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் தனது தற்கொலைக்குக் காரணம் தினேஷ்தான் என்றும் அவன் உயிரோடு நரக வேதனை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இதையடுத்து போலிஸார் தினேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News