×

பப்ஜி கேம் விளையாடியதை கண்டித்த தாய் – இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ரகுபதி. கஷ்டப்பட்ட நிலையிலும் வெல்டிங் வேலை செய்து தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்தார். அவரின் மகள் வித்யஸ்ரீ திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் 2ம் ஆண்டு படித்து வந்தார். வித்யஸ்ரீக்கு செல்போனில் பப்ஜீ கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார். நேற்று காலை கல்லூரிக்கு செல்லும் முன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார்.
 
பப்ஜி கேம் விளையாடியதை கண்டித்த தாய் – இளம்பெண் எடுத்த விபரீத முடிவு

திருவொற்றியூர் பகுதியில் வசித்து வருபவர் ரகுபதி. கஷ்டப்பட்ட நிலையிலும் வெல்டிங் வேலை செய்து தனது மகளை கல்லூரியில் படிக்க வைத்தார்.

அவரின் மகள் வித்யஸ்ரீ திருவொற்றியூர் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ.தமிழ் 2ம் ஆண்டு படித்து வந்தார். வித்யஸ்ரீக்கு செல்போனில் பப்ஜீ கேம் விளையாடுவதில் அதிக ஆர்வம் இருந்துள்ளது. எனவே, தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் தொடர்ந்து பப்ஜி கேம் விளையாடி வந்துள்ளார்.

நேற்று காலை கல்லூரிக்கு செல்லும் முன் செல்போனில் பப்ஜி கேம் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவரின் தாய் இப்படி தினமும் காலை படிக்காமல் செல்போனில் விளையாடிக் கொண்டே இருக்கிறாயே என கடுமையாக திட்டிவிட்டு வெளியே கடைக்கு சென்றுவிட்டார்.

அதன்பின் அவர் வீட்டிற்கு வந்த போது கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. அவர் பல நேரம் கதவு தட்டியும் கதவு திறக்கப்படவில்லை. எனவே, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது வித்யஸ்ரீ தூக்கு போட்டு பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதைக்கண்ட அவரின் தாய் அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதார். அதன்பின் வித்யஸ்ரீயின் உடலை திருவெற்றியூர் போலீசார் மீட்டு ஸ்டேன்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், தாய் திட்டியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News