×

நீட் ஆள்மாறாட்டம் – மேலும் ஒரு மாணவர் கைது !

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது. இதையடுத்து தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. தருமபுரி மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த இவர் மொரிசியஸ் தப்பி சென்று விட்டதாக செய்திகள்
 
நீட் ஆள்மாறாட்டம் – மேலும் ஒரு மாணவர் கைது !

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் வாணியம்பாடியைச் சேர்ந்த இர்பான் என்ற மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவரின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியது.

இதையடுத்து தருமபுரியை சேர்ந்த டாக்டர்.சஃபியின் மகன் முகமது இர்ஃபான் என்பவரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளதாக செய்திகள் வெளியானது. தருமபுரி மருத்துவ கல்லூரியில் படித்து கொண்டிருந்த இவர் மொரிசியஸ் தப்பி சென்று விட்டதாக செய்திகள் வெளியாகின. இந்தியாவில் இருந்து இர்பான் பற்றிய தகவல்கள் மொரிசியஸுக்கு அனுப்பப்பட்டு இர்ஃபானை இந்தியாவுக்கு திரும்ப அனுப்ப மொரிசியஸ் அரசாங்கம் சம்மதித்தது.

இதையடுத்து இந்தியா வரவழைக்கப்பட்ட இர்ஃபான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உதித் சூர்யாவைப் போலவே இர்பானின் தந்தையும் மருத்துவர் என்பவதும் அவர்களே இந்த ஆள்மாறாட்டத்துக்கு மூளையாக செயல்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News