×

இடுப்பு எலும்புக்குள் சென்ற ஊசி – வலியால் அவதிப்படும் இளைஞர் !

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக ஊசிப்போட்டுக் கொண்ட இளைஞருக்கு இடுப்புப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கோவை குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை என்பவர் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு ஊசிப் போடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு இடுப்புப் பகுதியில் வலி அதிகமாகி உள்ளது. இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார். அப்போது அவரது இடுப்பு எலும்புகளுக்குள் உடைந்த ஊசியின் பாதிப்பகுதி இருந்துள்ளது.
 
இடுப்பு எலும்புக்குள் சென்ற ஊசி – வலியால் அவதிப்படும் இளைஞர் !

கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காய்ச்சலுக்காக ஊசிப்போட்டுக் கொண்ட இளைஞருக்கு இடுப்புப் பகுதியில் ஸ்கேன் செய்து பார்த்தபோது மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கோவை குனியாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த தம்பிதுரை என்பவர் காய்ச்சலுக்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை எடுத்துள்ளார். அப்போது அங்கு அவருக்கு ஊசிப் போடப்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு இடுப்புப் பகுதியில் வலி அதிகமாகி உள்ளது. இதையடுத்து வேறு மருத்துவமனைக்கு சென்று ஸ்கேன் செய்து பார்த்துள்ளார்.

அப்போது அவரது இடுப்பு எலும்புகளுக்குள் உடைந்த ஊசியின் பாதிப்பகுதி இருந்துள்ளது. அதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் சம்மந்தப்பட்ட மருத்துவமனைக்கு சென்று விசாரித்த அவர்கள் முறையற்ற பதிலைக் கூறியுள்ளனர். இதையடுத்து அவர் அங்கேயே போராட்டத்தில் ஈடுபட்டார். இவரது போராட்டத்தை அடுத்து கோவை அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News