×

பத்திரிக்கையாளர்களுக்கு இனி கவர் கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் அதிரடி முடிவு !

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிவித்த அறிவிப்பில் இனி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அன்பளிப்புகள் எதுவும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது. எந்தவொரு துறையையும் விட திரையுலகம் அதிகமாக பத்திரிக்கையாளர்களை அதிகளவில் சார்ந்துள்ளது. இதன் காரணமாக திரையுலகினர் மத்தியில் ஊடகங்கள் மேலும் ஊடகவியலாளர்கள் மேலும் தனி மரியாதை உண்டு. திரைப்படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் கவர் (அன்பளிப்பு) வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. பெரிய தயாரிப்பாளர்கள் இதுவொரு பெரிய
 
பத்திரிக்கையாளர்களுக்கு இனி கவர் கிடையாது – தயாரிப்பாளர் சங்கம் அ

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நேற்று அறிவித்த அறிவிப்பில் இனி பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அன்பளிப்புகள் எதுவும் வழங்கப்படாது என அறிவித்துள்ளது.

எந்தவொரு துறையையும் விட திரையுலகம் அதிகமாக பத்திரிக்கையாளர்களை அதிகளவில் சார்ந்துள்ளது. இதன் காரணமாக திரையுலகினர் மத்தியில் ஊடகங்கள் மேலும் ஊடகவியலாளர்கள் மேலும் தனி மரியாதை உண்டு. திரைப்படம் வெளியாகும்போது பத்திரிகையாளர்களுக்கு என பிரத்யேக காட்சி திரையிடப்படும்போது பத்திரிகையாளர்களுக்கு உணவு மற்றும் கவர் (அன்பளிப்பு) வழங்கப்படுவது காலங்காலமாக நடந்து வருகிறது. பெரிய தயாரிப்பாளர்கள் இதுவொரு பெரிய விஷயமாக இல்லாமல் இருந்தாலும் சிறு மற்றும் குறு தயாரிப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய சுமையாக இருப்பதாக பேச்சுகள் எழுந்தன.

இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர்கள் யூனியன் நிர்வாகிகள் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையின் மூன்று முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :-

• பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அதாவது பட பூஜை, ஆடியோ வெளியீட்டு விழா, ட்ரெய்லர் வெளியீட்டு விழா, என அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளும் பத்திரிக்கையாளர்களுக்கு எந்தவிதமான அன்பளிப்பும் வழங்கப்பட மாட்டாது,

• சினிமா திரையிடல்களில் கலந்து கொள்ளும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இடைவேளையின் போது தேநீர் மட்டுமே வழங்கப்படும். (முன்னர் உணவு மற்றும் ஸ்னாக்ஸ் போன்றவை வழங்கப்பட்டது)

• மேலும் விமர்சனம் என்ற பெயரில் திரைப்படங்களை, நடிகர், நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர்களை வரம்பு மீறி தரக்குறைவாக விமர்சிக்கும் எந்த ஒரு நபரையும் தமிழ் சினிமா சார்ந்த எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் அழைப்பது இல்லை என்றும் அவர் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை அவர் மீது எடுக்கப்படும்

From around the web

Trending Videos

Tamilnadu News