×

விஸ்வாசம் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – ஆப்பு வைத்த அரசு

விஸ்வாசம், பேட்ட படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10ம் தேதி பேட்ட, விஸ்வாசம் இரு படங்களும் வெளியாகிறது. இரு படங்களும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. 10ம் தேதி மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், 9ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு விஸ்வாசம் படம் சென்னையில் சில தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. அதற்காக ரூ.1000 விலையில் நிர்ணயிக்கப்பட்டு
 
விஸ்வாசம் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – ஆப்பு வைத்த அரசு

விஸ்வாசம், பேட்ட படங்களுக்கான சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 10ம் தேதி பேட்ட, விஸ்வாசம் இரு படங்களும் வெளியாகிறது. இரு படங்களும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

10ம் தேதி மட்டும் 5 காட்சிகள் திரையிட்டுக்கொள்ளலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், 9ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு விஸ்வாசம் படம் சென்னையில் சில தியேட்டர்களில் திரையிடப்படவுள்ளது. அதற்காக ரூ.1000 விலையில் நிர்ணயிக்கப்பட்டு டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுவிட்டது.

விஸ்வாசம் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை – ஆப்பு வைத்த அரசு

இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்ட, விஸ்வாசம் படங்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை. அதேபோல் அரசு நிர்ணயித்த கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். கூடுதலாக வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். முதல் முறை எனில் ரூ.50 ஆயிரம் அபராதமும், 2வது முறை ரூ.1 லட்சமும் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அந்த தவறை செய்தால் திரையரங்க உரிமம் ரத்து செய்யப்படும்” என தெரிவித்தார்..

எனவே, 10ம் தேதி நள்ளிரவு 1 மணிக்கு விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படுமா என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News