×

ஏடிஎம்-ல் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுத்தால் ஓ.டி.பி அவசியம்…

OTP for more than 10k transaction in canara bank – தற்போது ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நாம் ரூ.20 ஆயிரம் முறை அதாவது ரு.10 ஆயிரம் 2 முறை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் சில கார்டுகளில் ரூ. 40 ஆயிரம் வரை எடுக்க முடியும். ஆனால், தற்போது ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் கண்டிப்பாக உங்களிடம் செல்போன் இருக்க வேண்டும். உங்கள் செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி அதாவது ஒருமுறை கடவுச்சொல்
 
ஏடிஎம்-ல் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் எடுத்தால் ஓ.டி.பி அவசியம்…

OTP for more than 10k transaction in canara bank – தற்போது ஏடிஎம் மையங்களில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நாம் ரூ.20 ஆயிரம் முறை அதாவது ரு.10 ஆயிரம் 2 முறை எடுத்துக் கொள்ளலாம். அதிலும் சில கார்டுகளில் ரூ. 40 ஆயிரம் வரை எடுக்க முடியும்.

ஆனால், தற்போது ரூ.10 ஆயிரத்திற்கு மேல் பணம் எடுத்தால் கண்டிப்பாக உங்களிடம் செல்போன் இருக்க வேண்டும். உங்கள் செல்போனுக்கு ஒரு ஓ.டி.பி அதாவது ஒருமுறை கடவுச்சொல் அனுப்பப்படும். அந்த எண்ணை நீங்கள் ஏடிஎம் எந்திரத்தில் பதிவிட்டால் மட்டுமே உங்களால் பணம் எடுக்க முடியும். இந்த முறையை தற்போது கனரா வங்கி ஏடிஎம் எந்திரங்களில் மட்டும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

போகப் போக அனைத்து ஏடிஎம் -களிலும் இந்த கட்டுப்பாடு நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிகம் படிக்காதவர்களின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி அவர்களுக்கு தெரியாமலேயே சிலர் பணத்தை எடுத்து மோசடி செய்வதாக ஏராளமான புகார்கள் வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, இனிமேல் நீங்கள் ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்க செல்லும் போது செல்போன் நிச்சயம் உங்களிடம் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News