×

ப சிதம்பரம் டிவிட்டரில் நன்றி – பொருளாதாரம் பற்றிக் கவலை !

நேற்று தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தங்கள் குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம். ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ காவல் முடிந்த பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கில் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ
 
ப சிதம்பரம் டிவிட்டரில் நன்றி – பொருளாதாரம் பற்றிக் கவலை !

நேற்று தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு தங்கள் குடும்பத்தினர் மூலமாக டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை 15 நாட்கள் காவலில் எடுத்த சிபிஐ காவல் முடிந்த பின்னர் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அவர் மீதான அமலாக்கத்துறை வழக்கில் அவருடைய முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து சிதம்பரத்தை நீதிமன்ற காவலில் வைக்க சிபிஐ தரப்பில் சொலிசிட்டர் துஷார் மேத்தா வாதம் செய்தார். ஆனால் இதற்கு சிதம்பரம் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அமலாக்கத் துறை விசாரணை காவலுக்கு செய்ய ப.சிதம்பரம் தயார் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத நீதிபதி சிதம்பரத்தை செப்டம்பர் 19-ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் நேற்று அவரது 75 ஆவது பிறந்தநாள் தினத்தில் காங்கிரஸ் கட்சியினரும் தொண்டர்களும் அவருக்கு தங்கள் வாழ்த்துகளையும் பாஜக அரசுக்கு கண்டனங்களையும் தெரிவித்தனர். இதையடுத்து தனது குடும்பத்தார் மூலமாக தனது டிவிட்டர் கணக்கில் இருந்து அவர் வாழ்த்துகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டில் ‘நண்பர்கள், காங்கிரஸ் கட்சியினர், நலம் விரும்பிகள் எனக்கு தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துகளை குடும்பத்தினர் மூலம் கிடைக்கப்பெற்றேன். நான் 74 வயதானவன் தான். ஆனாலும் எனது இதயத்துக்கு இப்போது 74 வயதுகள் குறைந்திருப்பதாக உணர்கிறேன். வாழ்த்திய அனைவருக்கும் நன்றி’ எனவும் மற்றொரு டிவிட்டில் ‘எனது கவலையெல்லாம் நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றித்தான். நாட்டின் பொருளாதாரம் பற்றிய புள்ளி விவரங்கள் கவலை தருகின்றன. கடவுள் இந்த நாட்டை ஆசீர்வதிக்கட்டும்’ எனவும் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News