×

காதலைப் பிரித்த பெற்றோர் – செல்போன் டவரில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை !

சேலம் மாவட்டத்தில் காதலைப் பிரிக்க தனது காதலியை வீட்டிலேயே அடைத்துக் கொடுமைப் படுத்திய பெற்றோரை எதிர்த்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு இளைஞர். சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி புள்ளாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த ரவிஷங்கருக்கும் அப்பகுதியில் வசித்து வந்த ஒருப் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இந்தக் காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண்ணை வீட்டிலேயே போட்டு அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். பலமுறை ரவிஷங்கர் தனது காதலியைப் பார்க்கசென்ற போதும் அவரை பார்க்கவிடாமல் அடித்தும் மிரட்டியும்
 
காதலைப் பிரித்த பெற்றோர் – செல்போன் டவரில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை !

சேலம் மாவட்டத்தில் காதலைப் பிரிக்க தனது காதலியை வீட்டிலேயே அடைத்துக் கொடுமைப் படுத்திய பெற்றோரை எதிர்த்து தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் ஒரு இளைஞர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள சங்ககிரி புள்ளாகவுண்டம்பட்டியைச் சேர்ந்த ரவிஷங்கருக்கும் அப்பகுதியில் வசித்து வந்த ஒருப் பெண்ணுக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. ஆனால் இந்தக் காதலுக்குப் பெண்ணின் பெற்றோர் ஒத்துக்கொள்ளவில்லை. இதனால் அந்தப் பெண்ணை வீட்டிலேயே போட்டு அடைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.

பலமுறை ரவிஷங்கர் தனது காதலியைப் பார்க்கசென்ற போதும் அவரை பார்க்கவிடாமல் அடித்தும் மிரட்டியும் அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்த ரவிஷங்கர் செல்போன் டவர் மேல் ஏறி அங்கிருந்து கீழேக் குதித்துத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் வாட்ஸ் ஆப்பில் தனது காதலியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுமாறு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவமானது அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த தற்கொலை குறித்துப் போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News