×

நிதிப்பற்றாக்குறையில் கட்சி – கமல் புது ஐடியா !

ஓராண்டுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றது அக்கட்சியினருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்து வரும் தேர்தல்களை சிறப்பாக எதிர்கொள்வதற்காக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டு வருகிறது. செயல்பாடுகள் திருப்தி அளித்தாலும் கட்சிக்கு பெரிய தலைவலியாக இருப்பது நிதிப்பற்றாக்குறைதான் என சொல்லப்படுகிறது. இதுவரை கட்சிக்காக கமல் தனது சொந்த சொத்துகள் பலவற்றை இழந்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில்
 
நிதிப்பற்றாக்குறையில் கட்சி – கமல் புது ஐடியா !

ஓராண்டுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட கட்சியான மக்கள் நீதி மய்யம் மக்களவைத் தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் கணிசமான வாக்குகளைப் பெற்றது அக்கட்சியினருக்குப் பெரும் நம்பிக்கையை அளித்துள்ளது. அடுத்து வரும் தேர்தல்களை சிறப்பாக எதிர்கொள்வதற்காக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோரோடு மக்கள் நீதி மய்யம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

செயல்பாடுகள் திருப்தி அளித்தாலும் கட்சிக்கு பெரிய தலைவலியாக இருப்பது நிதிப்பற்றாக்குறைதான் என சொல்லப்படுகிறது. இதுவரை கட்சிக்காக கமல் தனது சொந்த சொத்துகள் பலவற்றை இழந்துள்ளதாக சொல்லப்பட்ட நிலையில் இப்போது கட்சிக்கு நிதி சேர்க்கும் பொருட்டு புது வியூகத்தினை மக்கள் நீதி மய்யம் அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் சிறப்பு உறுப்பினர்கள் சேர்க்கை என்ற புதிய முறையை அமல்படுத்தியுள்ளனர். சிறப்பு உறுப்பினராக சேருபவர்கள் கட்சிக்காக ரூ 500 ஐ நிதியாகக் கொடுக்க வேண்டும். இப்படி குறைந்தபட்சம் 20 உறுப்பினர்களை சேர்ப்பவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News