×

பிங்க் கலரு சிங்குச்சான்: துரைமுருகனை கலாய்த்த ஓபிஎஸ்!

தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறினாலும் அவ்வப்போது சில நகைச்சுவை சம்பவங்களும் நடைபெறும். அந்தவகையில் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனை கலாய்த்தது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டசபை கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய கூட்டத்தின் போது, கேவி குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன் புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த
 
பிங்க் கலரு சிங்குச்சான்: துரைமுருகனை கலாய்த்த ஓபிஎஸ்!

தமிழக சட்டசபையில் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் மாறி மாறி குறை கூறினாலும் அவ்வப்போது சில நகைச்சுவை சம்பவங்களும் நடைபெறும். அந்தவகையில் இன்று துணை முதல்வர் ஓபிஎஸ் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகனை கலாய்த்தது சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக சட்டசபை கூட்டத்தில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்றைய கூட்டத்தின் போது, கேவி குப்பம் அதிமுக எம்எல்ஏ லோகநாதன் புதிய வட்டங்களை உருவாக்க வேண்டும் என வருவாய்த்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதற்கு பதிலளித்த வருவாய்த்துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் அம்மாவின் அரசு ஏற்கனவே 72 வட்டங்களை உருவாக்கி உள்ளது என்றார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் அம்மாவின் அரசு 73-வது வட்டத்தை உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். உடனடியாக துணை முதல்வர் ஓபிஎஸ் எழுந்து அம்மாவின் அரசு என கூறியதற்கு நன்றி என்றார். அதற்கு பதிலளித்த துரைமுருகன் கூடுதல் வட்டத்தை ஏற்படுத்தினால் எவ்வளவு வேண்டுமானாலும் புகழ்கிறேன் என்றார்.

தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், துரைமுருகன் இன்று பிங்க் கலர் சட்டை அணிந்து வந்ததை மனதில் வைத்து, இன்று துரைமுருகன் கலர்ஃபுல்லாக இருக்கிறார். என்றும் 16-ஆக உள்ளார் துரைமுருகன். உங்கள் இளமையின் ரகசியம் என்ன என துரைமுருகனிடம் கேட்டார். இதனையடுத்து அவையில் சிரிப்பலை எழுந்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News