×

விசாரணை செய்யப்போன போலிஸ் – லஞ்சம் கேட்டு வசமாக மாட்டிய சம்பவம் !

சென்னையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட லாரி உரிமையாளரை விசாரிக்க போன இடத்தில் லஞ்சம் கேட்டு மாட்டிக்கொண்ட போலிஸ் இப்போது கைதாகி சிறையில் உள்ளார். சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அசோக் குமார். இவர் மீது தொழில் போட்டி காரணமாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதை விசாரிப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்ற பரமேஸ்வரன் எனும் காவல் அதிகாரி அசோக்குமாரிடம் விசாரணை என்ற பெயரில் 15 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதைக் கொடுக்க மறுத்த
 
விசாரணை செய்யப்போன போலிஸ் – லஞ்சம் கேட்டு வசமாக மாட்டிய சம்பவம் !

சென்னையில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட லாரி உரிமையாளரை விசாரிக்க போன இடத்தில் லஞ்சம் கேட்டு மாட்டிக்கொண்ட போலிஸ் இப்போது கைதாகி சிறையில் உள்ளார்.

சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த லாரி உரிமையாளர் அசோக் குமார். இவர் மீது தொழில் போட்டி காரணமாக அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. அதை விசாரிப்பதற்காக அவரது அலுவலகத்துக்கு சென்ற பரமேஸ்வரன் எனும் காவல் அதிகாரி அசோக்குமாரிடம்  விசாரணை என்ற பெயரில் 15 லட்சம் ரூபாய் லஞ்சமாகக் கேட்டுள்ளார்.

அதைக் கொடுக்க மறுத்த அசோக்குமார், பரமேஸ்வரன் மேல் அம்பத்தூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து பரமேஸ்வரன் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பரமேஸ்வரன் இதுபோல குற்றவழக்குகளில் சிக்கி சஸ்பெண்ட் ஆகி சில நாட்களுக்கு முன்னர்தான் மீண்டும் பணியில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News