×

பொது இடத்தில் போலிஸ் காரர் மகன் படுகொலை – காதல் திருமணத்துக்கு உதவியதால் நேர்ந்த கொடூரம் !

மதுரை தல்லாக்குளம் பகுதியில் கோபால்சாமி என்ற வாலிபர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரை கோ புதூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் என்ற போலிஸ்காரரின் மகன் கோபால்சாமி. சமீபத்தில் பூமிநாதன் இறந்துவிட்டதால் கோபால்சாமியும் அவரது தாயாரும் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கோபால்சாமியின் தாய் மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை கோபால்சாமி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார்
 
பொது இடத்தில் போலிஸ் காரர் மகன் படுகொலை – காதல் திருமணத்துக்கு உதவியதால் நேர்ந்த கொடூரம் !

மதுரை தல்லாக்குளம் பகுதியில் கோபால்சாமி என்ற வாலிபர் 8 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

மதுரை கோ புதூர் பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் என்ற போலிஸ்காரரின் மகன் கோபால்சாமி. சமீபத்தில் பூமிநாதன் இறந்துவிட்டதால் கோபால்சாமியும் அவரது தாயாரும் மட்டும் தனியாக வாழ்ந்து வருகிறார்கள். கோபால்சாமியின் தாய் மதுரை மாநகர போலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் கிளார்க்காக வேலைப் பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்தவாரம் வெள்ளிக்கிழமை கோபால்சாமி மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். இது சம்மந்தமாக போலிஸார் நடத்திய விசாரணையில் ‘நண்பர் ஒருவருக்குக் காதல் திருமணம் செய்ய கோபால்சாமி உதவியதால், அதன் காரணமாக ஏற்பட்ட பகையால் கொல்லப்பட்டிருக்கலாம்’ எனத் தெரிகிறது. மேலும் கோபால்சாமி அந்த பகுதிகளில் நடக்கும் கார் திருட்டுகளைப் பற்றி துப்புக் கொடுத்து வந்ததாகவும் அதனால் கூட கொலை செய்யப் பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News