×

பொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ

Pollachi issue : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திருநாவுக்கரசு கும்பல் விடிய விடிய ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவள் இறந்துவிட்டாள் என ஒரு சிறுமி வெளியிட்டுள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமர், சதீஷ் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் பல
 
பொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ

Pollachi issue : பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திருநாவுக்கரசு கும்பல் விடிய விடிய ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததால் அவள் இறந்துவிட்டாள் என ஒரு சிறுமி வெளியிட்டுள்ள ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமர், சதீஷ் உள்ளிட்ட 4 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே திருநாவுக்கரசை 4 நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர் பல முக்கிய தகவல்களை கூறியதாக தெரிகிறது.

பொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ

இந்நிலையில், ஒரு சிறுமி பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அதில் பயத்துடன் பேசும் அந்த சிறுமி ‘ திருநாவுக்கரசு கும்பலில் 8 பேர் உள்ளனர். ஒரு நாள் நாங்கள் 5 பேர் அவர்களிடம் மாட்டிக் கொண்டோம். அப்போது ஒரு சின்னப் பொண்ணை அவர்கள் விடிய விடிய பாலியல் வன்கொடுமை செய்ததில் அவள் இறந்துவிட்டாள். அவளின் உடலை அந்த வீட்டிற்கு அருகிலேயே புதைத்து விட்டனர். இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என எங்களை மிரட்டி வைத்தனர். அதன்பின் அங்கிருந்து நாங்கள் தப்பி வந்துவிட்டோம். தற்போது இதுபற்றி தெரிய வேண்டும் என்பதற்காகவே இதுபற்றி கூறுகிறேன்” என அந்த சிறுமி பயத்துடனே அது பற்றி அந்த ஆடியோவில் பேசியுள்ளார்.

பொள்ளாச்சி விவகாரம் ; சிறுமியை விடிய விடிய கற்பழித்து கொலை : அதிர்ச்சி ஆடியோ

இந்த ஆடியோ பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. சிபிசிஐடி போலீசார் இந்த ஆடியோ விவகாரத்தையும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News