×

பொள்ளாச்சி விவகாரம் – கருத்து தெரிவித்த இளையராஜா

Ilayaraja on Pollachi Issue : பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார். பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அடித்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி பலரையும் கற்பழிக்க வைத்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர்
 
பொள்ளாச்சி விவகாரம் – கருத்து தெரிவித்த இளையராஜா

Ilayaraja on Pollachi Issue : பொள்ளாச்சி பாலியல் சம்பவம் குறித்து இசையமைப்பாளர் இளையராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் இளம்பெண்களை ஆசை வார்த்தை கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்து சென்று அடித்து மிரட்டி அவரை பலாத்காரம் செய்ததோடு, அதை வீடியோ எடுத்து மிரட்டி பலரையும் கற்பழிக்க வைத்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள செல்லம்மாள் மகளிர் கல்லூரியில் நடந்த விழாவில் இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். அப்போது, மாணவிகளுக்கு பிடித்த பாடலை அவர் பாடி அசத்தினர். அதன்பின் அவரிடம் பொள்ளாச்சி விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கருத்து கேட்டனர்.

அதற்கு “தமிழக மக்களின் உணர்வு எப்படி இருக்கிறதோ அதோடு நானும் இருக்கிறேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடச்கக்கூடாது என நினைக்கிறார்கள். அதுதான் என் உணர்வும்” என அவர் தெரிவித்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News