×

பொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை – இதுதான் காரணமா?

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு தலைக்காதல் விவகாரம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி 4 ஆண்டுகளாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். எனவே, இருவீட்டாரும் அதை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். வருகிற ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் பிரகதி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்ப்பட்டுக் கிடந்த
 
பொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை – இதுதான் காரணமா?

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் ஒரு தலைக்காதல் விவகாரம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

பொள்ளாசியில் பிரகதி என்கிற கல்லூரி மாணவி கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகதி 4 ஆண்டுகளாக உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். எனவே, இருவீட்டாரும் அதை ஏற்று இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவெடுத்திருந்தனர். வருகிற ஜூன் மாதம் அவர்களின் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில்தான் பிரகதி கொலை செய்யப்பட்டுள்ளார்.

பொள்ளாச்சி கல்லூரி மாணவி படுகொலை – இதுதான் காரணமா?

கொலை செய்யப்ப்பட்டுக் கிடந்த பிரகதி அணிந்திருந்த நகைகள் திருடு போகவில்லை. எனவே நகைக்காக இந்த கொலை நடைபெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. கல்லூரியில் இருந்து வீட்டிற்கு திரும்பிய அவரை 2 பேர் காரில் கடத்தி சென்றது சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. எனவே, போலீசார் இதுபற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனவே, அவரை ஒருதலையாக காதலித்த இருவர், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது பிடிக்காமல் காரில் கடத்தி சென்று கொலை செய்திருக்கலாம் எனக்கருதப்படுகிறது. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News